தமிழகத்தில் கோடை மழை! வெதர்மேன் என்ன சொல்கிறார்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாக கோடை வெயில் தமிழகம் முழுவதும் கொளுத்தி கொண்டு வரும் நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே கோடைமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் இதுகுறித்து கூறியிருப்பதாவது:
எதிர்பார்க்கப்பட்டதுபோல் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று இரவு முதல் பரவலாக மழை பெய்யத் தொடங்கும். டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டிணம், காரைக்கால், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் நீண்ட நாட்களுக்கு பின் இன்று நண்பகலுக்கு பின் மழை பெய்து இருக்கிறது.
தென் தமிழகத்தின் பலபகுதிகளிலும், கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று இரவு மழை அல்லது நாளை காலை மழை பெய்யக்கூடும்.
நெல்லை, தேனி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு அல்லது நாளை காலை மழை பெய்யக்கூடும். மதுரை, சிவகங்கையிலும் கூட மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை ஒரு வாரத்துக்கு வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்குள்ளேயே இருக்கும். வங்காள விரிகுடா கடலில் இருந்து கிழக்கு நோக்கி காற்று வீசத் தொடங்கிவிட்டதால், வெப்பநிலை இயல்புக்கு குறைவாகவே இருக்கும். அதிகபட்சமாக 36 டிகிரிவரை செல்லலாம். கடந்த 2016-ம் ஆண்டு இருந்ததைப் போல் 40டிகிரி அளவுக்கு செல்லாது. இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout