ஈசிஆரில் இருந்து சென்னையை நோக்கி வரும் மேகக்கூட்டங்கள்; தமிழ்நாடு வெதர்மேன்
- IndiaGlitz, [Monday,October 28 2019]
ஈசிஆர் என்று கூறப்படும் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து சென்னைக்கு மேகக் கூட்டங்கள் நகர்ந்து வருவதால் சென்னையில் விட்டு விட்டு கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சீசன் நடந்து வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. சென்னையிலும் இன்று விட்டுவிட்டு மழை பெய்தது. இந்த நிலையில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகியுள்ளதால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும்.
இந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் திசையை வைத்துதான் அது எங்கே செல்கிறது என்பதை கணித்து குறித்து சொல்ல முடியும். இன்று சென்னையில் மழை விட்டு விட்டு பெய்தாலும், இரவு நேரங்களிலும் அதிகாலை வேளைகளிலும் நல்ல மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 37 மி.மீ. மழையும், குறைந்தபட்சமாக கிண்டியில் 8 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.