இன்றிரவு முதல் சென்னையில் மழை வெளுத்து வாங்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

  • IndiaGlitz, [Saturday,November 11 2017]

தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் மழை குறித்து பதிவு செய்திருக்கும் முக்கிய தகவல் இதுதான்:

நான் உங்களுக்கு அளிக்கும் இந்த வானிலை அறிக்கை என்பது அதிகாரப்பூர்வ அறிக்கை அல்ல. தயவு செய்து இந்திய வானிலை மையம் அறிவிக்கும் அறிவிப்பை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நான் ஏராளமான வரைபடங்களையும், விளக்கங்களையும் அளித்து பதிவு செய்துள்ளேன். வானிலை குறித்து அறிந்து கொள்ள விருப்பமாக இருந்தால், நீங்கள் கற்றுக்கொள்ள உதவியாக இருக்கும்.

தீவிரமான பருவமழை என்பது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியோடு நெருங்கிய தொடர்பு உடையது. ஆதலால் மழை வந்தால் 4 நாட்கள் வரை நீடிக்கும். கடந்த முறை உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நமக்கு 9 நாட்கள் வரை மழையைக் கொடுத்தது. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக மழை இன்றி, ஒரு சின்ன இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே வடகிழக்கு பருவமழை தொடங்கியபின், 2-வது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இப்போது உருவாகி இருக்கிறது. இது வட தமிழக கடற்கரைப்பகுதியான நாகை முதல் சென்னை பெரும்பாலான இடங்களில் மழையைக் கொடுக்கும்.

தென் மேற்கு வங்கக் கடல்பகுதியில் 2-வது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது, அளவில் மிகப்பெரியதாக இருந்தபோதிலும், தீவிரம் குறைவாக இருக்கிறது. மிகப்பெரிய அளவில் மேகக்கூட்டங்கள் பரந்து கிடக்கின்றன.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். தென் மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகினால், அதன் மூலம் எப்போதுமே வடதமிழக கடற்கரைப்பகுதிகளான திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், புதுச்சேரி, நாகை, திருவாரூர் மாவட்டங்கள்தான் பயன்பெறும். மேகக்கூட்டங்கள் தீவிரமாகப் பரவும்போது, சென்னை கடற்கரைப்பகுதியில் அதிகமான மழை இருக்கும். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் அதிகமான மழை எதிர்பார்க்க முடியாது, ஆங்காங்கே ஒருசில இடங்களில் மட்டும்தான் மழை இருக்கும்.

குறைந்த காற்றழுத்த தாழ்நிலை எங்கே நகரும்?- ஆந்திரா நோக்கி நகரும் என்று பி.பி.சி. கூறுகிறது. சென்னையில் துளி மழைகூட இருக்காது என்கிறது. ஆனால், சென்னையில் எப்படி மழை பெய்யப்போகிறது என்பதை பார்க்கலாம்.

இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வடக்கு நோக்கி, வடமேற்காக நகர்ந்து, வடதமிழக கடற்கரைப்பகுதிக்கு அருகே வரும். வடஇந்தியா பகுதியில் இருந்து காற்று வீசுவதால், அதன் மூலம் உந்தப்பட்டு, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலப்பகுதிக்கு நகராமல், வடக்கு ஆந்திரா கடற்கரை, ஒடிசா கடற்கரையைக் கடந்து வலுவிழக்கும். இங்கிலாந்து வானிலை மாதிரியை அடிப்படையாகக் கொண்டு பி.பி.சி. இதை புயலாகக் கணித்து, ஆந்திராவின் வடபகுதியில் மழையின்றி கடக்கும் என்று கூறுகிறது. சென்னையைப் பற்றி ஒரு வார்த்தை கூட கூறவில்லை என்பது நகைப்புக்குரியது

இன்று இரவு முதல் மழை தொடங்கி, புதன்கிழமை வரை நீடிக்கலாம். அவ்வப்போது சின்ன சின்ன இடைவெளிகள் இருக்கும். சில நேரங்களில் கனமழைக்கும், மிக கனமழைக்கும் வாய்ப்புஉண்டு. குறிப்பாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகளில் இருக்கும். உள்மாவட்டங்களான வேலூர், விழுப்புரம், மற்ற கடற்கரைப் பகுதிகளான கடலூர், புதுச்சேரி, காரைக்கால், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டப் பகுதிகளிலும் மழை இருக்கும்.

நவம்பர் 15-ந்தேதிக்கு பின், குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி சென்னையின் வடபகுதியை நோக்கி நகரும். காற்றின் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழையை எதிர்பார்க்கலாம்.

மழை தொடங்கியவுடனே, நான் அது குறித்த பதிவுகளை உங்களுக்கு அளிப்பேன். எவ்வளவு நாட்கள் மழை இருக்கும்?, எந்த அளவுக்கு (கனமழையா, மிககனத்த, மிதமான) மழை பெய்யும்?, எந்தெந்த இடங்களில், நகரங்களில் மழை இருக்கும்? உள்ளிட்ட தகவல்களை நான் பதிவிடுகிறேன். ஆதலால், அச்சம் வேண்டாம். நாம் குடிநீர் பற்றாக்குறையின்றி அடுத்துவரும் மாதங்களுக்கு இருக்க, நமக்கு இன்னும் மழை பெய்ய வேண்டியது அவசியம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்

More News

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ குறித்து தினகரன் முக்கிய அறிவிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது சசிகலாவால் எடுக்கப்பட்ட வீடியோ உரிய நேரத்தில் தேவைப்பட்டால் வெளியிடப்படும் என சசிகலாவின் உறவினர்கள் கூறி வந்தனர்.

பிக்பாஸ் நடிகருக்கு மலையாள திரையுலகில் கிடைத்த வாய்ப்பு

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பலருக்கு நிகழ்ச்சி முடிந்த பின்னர் சினிமாவிலும் தொலைக்காட்சிகளிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

சென்னை திரையரங்கில் ரசிகர்களுடன் 'அறம்' பார்த்த நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'அறம்' திரைப்படம் நேற்று வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

மலேசியாவில் நட்சத்திர கலைவிழா: கமல், ரஜினி கலந்து கொள்கின்றனர்.

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் இணைந்து, வரும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி நட்சத்திர விழா ஒன்றை மலேசியாவில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

சிம்புவை எதிர்த்து பாஜக போராட்டமா? திடீர் போலீஸ் பாதுகாப்பு

சமீபத்தில் சிம்பு பண மதிப்பிழப்பு குறித்த பாடல் ஒன்றை வெளியிட்டார் என்பது அனைவரும் தெரிந்ததே. 'தட்றோம் தூக்றோம்' என்று தொடங்கும் இந்த பாடலில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட