தமிழக மருத்துவ மனைகளிலும் படுக்கை இல்லையா? உண்மையை உடைக்கும் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா நோய்த்தொற்றின் தீவிரத்தால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத அளவிற்குத் தற்போது மருத்துவமனைகளில் இடப் பற்றாக்குறை, அதோடு ஆக்சிஜன் பற்றாக்குறை போன்ற நேருக்கடிகள் ஏற்பட்டு இருக்கின்றன. அதுவும் இதுபோன்ற நெருக்கடிகளை பல வடமாநிலங்கள்தான் சந்தித்து வருகின்றன என்பது போன்ற தகவல்களும் ஊடகங்களில் வெளியாகியது.
இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத அளவிற்கு தற்போது தமிழகத்திலும் சில அரசு மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதாகத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்பட்டு இருக்கும் இடப்பற்றாக்குறை குறித்த வீடியோ தற்போது பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.
அதேபோன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் கொரோனா நோயாளிகளுக்கான இடவசதி இல்லாமல் பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதாகவும் அதோடு சில நோயாளிகள் ரிஷப்ஷனில் உட்கார வைக்கப்பட்டு உள்ளதாகவும் நியூஸ் 18 வீடியோ வெளியிட்டு இருக்கிறது. சுகாதாரக் கட்டமைப்பு அதிகமுள்ள மாநிலமாக தமிழகத்தைப் பலரும் பாராட்டி வந்தனர்.
தற்போது தமிழகத்திலும் கொரோனா நோய்த்தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் தற்போது சிறிதும் கலக்கமும் ஏற்பட்டு இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com