தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு… வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில் தமிழகப் பள்ளிகளில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டு உள்ளது.
மேலும் 9,10,11,12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே முதலில் பள்ளிகள் திறக்கப்படுகிறது. மற்ற மாணவர்கள் எப்போதும் போல ஆன்லைனில் வகுப்புகளை கவனித்துக் கொள்ளலாம் என வலியுறுத்தப் பட்டிருக்கிறது. இதனால் 50% மாணவர்கள் மட்டுமே தினம்தோறும் பள்ளிகளுக்கு வரவழைக்கப்பட வேண்டும் என்பதையும் தமிழக அரசு வலியுறுத்தி இருக்கிறது.
இதையடுத்து பள்ளிகளில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்த அறிக்கையை தற்போது மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டு உள்ளது. அதில்,
கொரோனா பரவலைத் தடுக்க மாணவர்களை 6 அடி இடைவெளியில் அமர வைக்க வேண்டும்.
மாணவர்கள் கைகழுவும் வசதி, உடல் வெப்பப் பரிசோதனை செய்யப்படும் கருவி ஆகியவை பள்ளிகளில் வைத்திருக்க வேண்டும்.
இதமான சூழல் இருந்தால் மாணவர்களை பள்ளி வளாகத்தில் அமரவைத்து பாடங்களை நடத்தலாம்.
முதல் நாளில் 50% மாணவர்களும் மறுநாளில் எஞ்சிய 50% மாணவர்களும் என மாறி மாறி பள்ளிக்கு வரவேண்டும.
கொரோனா அறிகுறி உள்ள மாணவர்கள், ஆசிரியர்களை பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது.
மாணவர்களுக்கு சத்து மாத்திரை மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையானவற்றை வழங்க வேண்டும்.
கொரோனா தடுப்பூசி செலுத்தும் வயதுடைய அனைத்து மாணவர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருப்பதை பள்ளி நிர்வாகம் அல்லது உள்ளாட்சி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
பள்ளிகளில் உள்ள மேஜைகள், கேண்டீன், கழிவறைகள், அனைத்து வகுப்பறைகள், நூலகம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்திருக்க வேண்டும்.
பள்ளி வாகனங்களை பயன்படுத்துவதற்கு முன்பாக கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
பள்ளிகளில் ஒவ்வொரு இருக்கைக்கும் நடுவே குறைந்தது 5 அடி இடைவெளி இருக்க வேண்டும்.
ஆசிரியர்கள் அறை, அலுவலகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.
பள்ளியின் கழிவறைக்கு வெளியே கைக்கழுவுமிடம் உள்ளிட்ட பகுதிகளில் சமூக இடைவெளியை பின்பற்றி வட்டம் போட்டிருக்க வேண்டும்.
பள்ளிகளில் விழாக்கள் அல்லது நிகழ்ச்சிகள் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிகளுக்கு வர அனுமதி இல்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout