தமிழகத்தின் புதிய தலைமைச்செயலாளர் ஆன பெண் ஐஏஎஸ் அதிகாரி

  • IndiaGlitz, [Thursday,December 22 2016]

தமிழகத்தின் தலைமைச்செயலாளர் ராம்மோகன்ராவ் வீட்டில் நேற்று விடிய விடிய வருமான வரித்துறையினர் சோதனை செய்து ஏராளமான பணம், நகைகள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் அவரது பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

தலைமைச்செயலாளர் ஆக இருந்த ராம்மோகன்ராவ் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு துறை இல்லாத அதிகாரியாக உள்ளதாகவும், புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

1981ஆம் ஆண்டு ஐஏஎஸ் முடித்த கிரிஜா வைத்தியநாதன் தமிழக அரசில் பல்வேறு துறைகளிலும் பொறுப்பு வகித்தவர். தலைமைச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள இவர், இதற்கு முன் பார்த்து வந்த நிர்வாக சீர்திருத்த ஆணையர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று கூறப்படுகிறது.

More News

சமந்தாவின் 'சாவித்திரி' கனவு என்ன ஆயிற்று?

கோலிவுட் திரையுலகின் நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் பிரபல நடிகை சமந்தா...

விஜய் சொன்ன ரெண்டு வார்த்தையே மிக அதிகம். கீர்த்திசுரேஷ்

மிக குறுகிய காலத்தில் இளையதளபதி விஜய், சூர்யா போன்ற பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்ற அதிர்ஷ்டக்கார நடிகை கீர்த்திசுரேஷ்...

கார்த்தியின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

'காஷ்மோரா' படத்தின் பின்னர் கார்த்தி தற்போது பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 'காற்று வெளியிட'

தலைமை வீட்டை அடுத்து மேலும் ஒரு முக்கிய ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் சோதனை

தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக தலைமைச்செயலாளர் ராம்மோகன்ராவ் வீட்டிலும் அவருடைய மகன் மற்றும் உறவினர்...

விஜயகாந்த் டைட்டிலுக்கு மாறிய விக்ரம் பிரபுவின் 'முடிசூடா மன்னன்'

விக்ரம் பிரபு நடித்த 'முடிசூடா மன்னன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்...