தமிழக ஊர்ப்பெயர்கள்: தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் தமிழக அரசின் புதிய அரசாணை!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தின் ஊர்ப்பெயர்களை தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப ஆங்கிலத்தில் எழுதப்பட வேண்டும் என்று காலம் காலமாக முயற்சி செய்து வருகிறோம். இந்த முயற்சி ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே தொடங்கப்பட்டு வருகிறது. உதாரணமாக ஆங்கிலேயர் காலத்தில் ஊட்டி என்ற நிலப்பகுதியை நம் தமிழர்கள் “ஒத்தைக்கல் மந்து” என்றே அழைத்து வந்தனர். அதை பிரிட்டிஷ் அரசாணையில் Ootacamund என்று எழுதினார்கள். திமுக காலத்தில் இந்த உச்சரிப்பை தமிழ்ப்படுத்த வேண்டும் என்று “உதகமண்டலம்” என்று திருத்தி அமைக்கப்பட்டது. ஆனால் அந்தப் பெயரை பயன்படுத்துகிறோமா என்றால் இல்லை. பெரும்பாலும் ஊட்டி, உதகை, நீலகிரி என்றே குறிப்பிடுகிறோம். இப்படி காலம் காலமாக பேசுவது ஒருமாதிரியும் எழுதுவது ஒருமாதிரியும் தமிழகத்தின் ஊர்ப் பெயர்கள் இருந்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 1,018 ஊர்ப்பெயர்களை தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப மாற்றியமைக்கும் ஒரு புதிய அரசாணையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறப்பித்துள்ளார். இந்தப் பணியை தமிழ் வளர்த்துறை மற்றும் சென்னை செய்தித்துறை மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. Tondiyarpet என இதற்கு முன்பு எழுதிவந்தோம். தற்போது மேற்கொள்ளப் பட்ட புதிய திருத்தத்தின்படி, Thandaiyaarpettai என உச்சரிப்பது போலவே எழுதலாம். அதேபோல Perambur என்ற எழுத்துக்கள் Peramboor என்றும் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை Coimbatore என்றே தமிழக அரசாணைகளில் குறிப்பிட்டு வந்தோம். தற்போது உச்சரிப்பது போலவே Coyambuththoor என எழுதலாம்.
மேலும், சென்னை, கடலூர், தருமபுரி, திருவள்ளூர், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, திருப்பூர், தூத்துக்குடி, கோவை, பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மொத்தம் 1018 ஊர்களின் பெயர்கள் தமிழ் உச்சரிப்புப்படி மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. ஆட்சி நிர்வாகம், காலம், மக்களின் உச்சரிப்பு எனப் பல நேரங்களில் நாம் ஊர்ப்பெயர்களை மாற்றிக்கொண்டே வருகிறோம். இப்படி மாற்றப்பட்ட ஊர்ப்பெயர்களுக்கு முறையான எழுத்து அமைப்பைத் தற்போது தமிழக அரசு கொண்டு வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout