உடல் உறுப்பு தானத்தில் முதலிடம். தமிழகதிற்கு பெருமை. அமைச்சர் தகவல்
- IndiaGlitz, [Wednesday,November 30 2016]
இந்தியா முழுவதும் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வை மத்திய மாநில அரசுகள் ஏற்படுத்தி வரும் நிலையில் இன்னும் போதிய விழிப்புணர்வு இதுகுறித்து பொதுமக்களுக்கு ஏற்படவில்லை என்றே கருதப்படுகிறது. ஆனால் தமிழகம் இந்த விஷயத்தில் காலரை தூக்கி பெருமைப்படும் வகையில் உள்ளது. இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் கூறியுள்ளார். இது தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் பெருமைப்பட வைக்கும் ஒரு விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல் உறுப்பு தானம் என்பது ஒருவர் உயிருடன் இருந்தாலும் அவருடைய மூளையின் பகுதி பாதிப்படைந்து செயல் இழக்கும் நிலையில் இருந்தால் அவருடைய இருதயம், சிறுநீரகம் உள்பட முக்கியமான உடல் உறுப்புகள் அவருடைய வாரிசுதாரர்களின் அனுமதியுடன் மற்றவர்களுக்குத் தானம் வழங்கினால், பல உயிர் வாழ வழி வகுக்கும்
தமிழகத்தில் இதுவரை மூளைச்சாவு அடைந்த 895 பேர்களிடம் இருந்து 4992 உடல் உறுப்புகளைத் தானமாக பெறப்பட்டுள்ளது. இந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்திலும், மகாராஷ்டிரா இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்த தகவலை உடல் உறுப்பு தான வார விழாவை முன்னிட்டு புதுக்கோட்டையில் நடைபெற்ற விழாவில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.