சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கேவியட் மனு

  • IndiaGlitz, [Sunday,January 22 2017]

மாணவர்கள் போராட்டத்தின் அழுத்தம் காரணமாக டெல்லி சென்ற முதல்வர் ஓபிஎஸ், ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை இயற்ற மத்திய அரசை வலியுறுத்தினார். அதன்பயனாக நேற்று அவசர சட்டம் தமிழக கவர்னாரால் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. ஆறு மாதம் செல்லக்கூடிய இந்த அவசர சட்டத்துக்கு மாற்றான சட்ட முன்வடிவு எதிர்வரும் சட்ட மன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என்று தமிழக முதல்வர் உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், ஜல்லிக்கட்டுப் போட்டி தொடர்பாக ஏதாவது வழக்கு தொடரப்பட்டால், தமிழக அரசின் கருத்தையும் கேட்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஜல்லிக்கட்டு தொடர்பான எந்த உத்தரவையும் தமிழக அரசுத் தரப்பு விளக்கத்தை கேட்காமல் பிறப்பிக்கக் கூடாது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர, பீட்டா எனப்படும் விலங்குகள் நல அமைப்பு முடிவு செய்துள்ளது. இந்த சூழலில், தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.