டெல்லி கலவரம்: தமிழ் திரைப்பட இயக்குனர்கள் கண்டனம்
- IndiaGlitz, [Saturday,February 29 2020]
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் திடீரென வன்முறை ஏற்பட்டு அது கலவரமாக மாறியது. இதில் சுமார் 40 பேருக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகவும் நூற்றுக்கும் அதிகமானோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது
இந்த நிலையில் தற்போது டெல்லி இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று பிரபல இயக்குனர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்
அப்போது இயக்குனர் அமீர் கூறியபோது ’டெல்லி கலவரம் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் குண்டர்களால் நடத்தப்பட்டது என்று குற்றம் சாட்டினார். மேலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு 11 மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன என்றும் அறவழியில் நடத்தி வரும் மக்களின் போராட்டத்தை வன்முறை ஆக்காமல் மக்களின் உணர்வுகளை புரிந்து அதற்கு தீர்வு காண வேண்டும் என்று ஆளும் அரசை நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அமீர் கூறினார். இதேபோல் இயக்குனர் வெற்றிமாறன் கூறும்போது சிஏஏ, என்.ஆர்.சி. என்.பி.ஆர் ஆகிய சட்டங்கள் இஸ்லாமியர்களுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த சாமானியர்களுக்கும் பிரச்சனை தரக்கூடியது என்று கூறினார்
தமிழ் திரைப்பட முன்னணி இயக்குனர்கள் டெல்லியில் நடந்த வன்முறைக்கு கண்டனம் தெரிவித்தும், சிஏஏ போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பேட்டி அளித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது