#GoBackStalin டூ #WeStandWithStalin ஹேஸ்டேக்...! டுவிட்டரில் ட்ரெண்டாகும் முதல்வர்...! எப்படி..?
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் கொங்கு மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை உள்ளிட்ட இடங்களில் கொரோனா களப்பணிகளில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் இன்றுகாலை முதலே டுவிட்டரில் #GoBackStalin என்ற ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டாகி வந்தன. ஆனால் முதல்வரின் விசிட்-க்கிற்குப் பிறகு பொதுமக்கள் ஆறுதல் அடைந்துள்ளனர் என்றே சொல்லலாம். இதற்கு காரணம் ஸ்டாலின் அவர்களின் புதிய அதிரடி நடவடிக்கைகள் தான்.
மருத்துவமனைகளில் ஆய்வு:
காலையில் திருப்பூர் மற்றும் ஈரோட்டில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளை பயன்பாட்டிற்கு திறந்து வைத்த முதல்வர், ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா நோயாளிகளின் உடல்நலம் குறித்து விசாரித்தார். இதைத்தொடர்ந்து, கோவைக்கு விசிட் அடித்த முதல்வர் மாநகராட்சி உள்ள 5 மண்டலங்களில் தலா 10 இன்னோவா ஆம்புலன்ஸ் வீதம், 50 இன்னோவா ஆம்புலன்ஸ் சேவைகளை அங்கு துவங்கி வைத்தார். இதன் பின் பிபிஇ கிட் உடையணிந்து, கோவை இஎஸ்ஐ மருத்துவமனையின் கொரோனா பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொரோனா நோயாளிகளிடம் உடல்நிலை குறித்து கேட்டும், அவர்களுக்கு ஆறுதலும் கூறியுள்ளார்.
டுவிட்டர் பதிவு :
"#Covid19 தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை ESI மருத்துவமனையின் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை PPE Kit அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன்.மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும். தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும்! #Covid19 வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன்! இப்பெருந்தொற்றை நாம் வெல்வோம்!" என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
#GoBackStalin டூ #WeStandWithStalin ஹேஸ்டேக்:
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கோவை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டது பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஸ்டாலின் பிபிஇ கிட்- உடன் மருத்துவமனையில் களமிறங்கிய புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தநிலையில் டுவிட்டரில் #WeStandWithStalin ஹேஸ்டேக்குகள் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அதிரடி நடவடிக்கை மற்றும் புதிய அணுகுமுறைகள் என்று கூறப்படுகிறது. நம் நாட்டில் கொரோனா நோயாளிகளை, கவச உடையணிந்து முதல்வர் நேரில் சந்தித்து விசாரிப்பது, இதுவே முதல்முறை என்றும் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. முதல்வர் கொங்கு மண்டல வருகை குறித்த மீம்ஸ்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Today's Scenario #WeStandWithStalin pic.twitter.com/HqMXfK1wZO
— Troll Mafia (@offl_trollmafia) May 30, 2021
INDIA Trends #WeStandWithStalin
— Kaajal Pasupathi (@kaajalActress) May 30, 2021
On top @ No 1 hits 200k Tweets ??
7 yrs of disaster vs
1 month of success.
Podu ?? we win❤️??
Proud of My Leader ?? pic.twitter.com/KMOigVp7jg
#WeStandWithStalin always ayya MKS for tamilnadu ???? just wow he is be safe thalapathy ????❤️ @mkstalin #MKStalin
— kavin sis ?????? (@ranjana_cute) May 30, 2021
Pic of the day No one in India done this as CM but one can do is MKS only for the people who he love and who love him ??
MKS can do anything for TN people ?? pic.twitter.com/8pLCtTiB8b
I feel proud sir that am supporting you..
— Krithi (@kiruthigaM3) May 30, 2021
Hats off. #Welcome_TNCM_Stalin#WeStandWithStalin pic.twitter.com/3p5kF5cmXb
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout