தமிழ்நாட்டின் ஆபிரகாம் லிங்கன் எடப்பாடி பழனிசாமி… பொள்ளாச்சி ஜெயராமன் புகழாரம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ்நாட்டின் ஆபிரகாம் லிங்கன் நம்ம முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என புகழ்ந்து பேசியுள்ளார் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன். தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் தற்போது சூடுபிடித்து உள்ளது. இந்நிலையில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பிரச்சாரக் கூட்டங்களில் அவ்வபோது சர்ச்சைகளும் வெடித்து வருகின்றன. காரணம் சிலர் அரசியல் நாகரிகம் தெரியாமல் மக்கள் மத்தியில் நடந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் எதிர்க்கட்சிகள் இப்படி அரசியல் நாகரிகம் இல்லாமல் பெண்கள் மத்தியில் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று முதல்வர் பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார். இதையடுத்து சென்னையில் உள்ள வானகரம் பகுதியில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அவர்களை முதல்வர் வேட்பாளராக எற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் முதல்வர் பழனிசாமி அவர்களின் சிறப்பான திட்டங்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவர்களைத் தொடர்ந்து பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் தமிழகத்தின் ஆபிரகாம் லிங்கன் எடப்பாடி பழனிசாமி என்று புகழாரம் சூட்டி உள்ளார். மேலும் அம்மாவால் இரண்டு முறை நேரடியாக முதல்வராகப்பட்டவர் என்று ஓ.பன்னீர்செல்வம் அவர்களையும் புகழ்ந்து உள்ளார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய வளர்மதி முதல்வர் பழனிசாமி அவர்களும் துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களும் ராமன் லட்சுமணனை போலவும் மருது சகோதரர்களை போலவும் இணைந்து செயல்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments