நடைமுறைக்கு வந்த ரூ.2,500 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு திட்டம்… முதல்வரை வாழ்த்தும் மக்கள்!!!

 

தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் சிறப்பு பொங்கல் தொகுப்புடன் ரூ.2,5000 ரொக்கம் வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ள மக்களுக்கு இத்திட்டம் பெரும் மகிழ்ச்சியை அளித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் பாரம்பரியப் பண்டிகையான பொங்கலை சிறப்பிக்கும் விதமாகவும் தமிழக அரசு இத்திட்டத்தை அமல்படுத்தி இருப்பதாக விளக்கம் அளித்து உள்ளது.

கொரோனா காலக்கட்டத்தில் வீடுகளுக்குள் சிக்கி தவித்த பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு உதவும் வகையில் காய்கறி அடங்கிய சிறப்பு தொகுப்பை தமிழக அரசு வழங்கியது. அந்த வகையில் பொருளதாரத்தை ஈடுகட்டவும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. தற்போது தமிழகத்தல் நிவர், புரெவி போன்ற புயல்கள் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. ஏற்கனவே கொரோனா தாக்கத்தால் பொருளாதாரத்தில் வீழ்ச்சி கண்டிருக்கும் மக்களை மகிழ்விக்கும் விதமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ரூ.2,500 பணம் வழங்கும் திட்டத்தை அமல் படுத்தி இருக்கிறார்.

கடந்த வாரத்தில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர் இத்திட்டத்தை இன்று முதல் தமிழக முழுவதும் அமல்படுத்தி இருக்கிறார். இதனால் ஒவ்வொரு நியாய விலைக் கடைகளிலும் அரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் முற்றும் முழு கரும்புடன் சேர்த்து ரூ.2,500 பணமும் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் அரிசி அட்டை வைத்து இருக்கும் ஒவ்வொரு குடும்ப அட்டை தாரர்களுக்கும் வழங்கப்படும் எனக் கூறப்பட்டு இருந்தது. இதனால் சர்க்கரை அட்டை வைத்திருக்கும் பல லட்சக்கணக்கான மக்கள் மீண்டும் அரிசி அட்டைக்கார்டாக மாற்றவும் முயற்சி செய்தனர். அப்படி குடும்ப அட்டைக்கார்டுகளை மாற்ற விண்ணப்பித்து இருக்கும் அனைவருக்கும் இச்சிறப்பு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் மீண்டும் விளக்கம் அளித்து உள்ளார்.

இதனால் தமிழக மக்கள் அனைவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து பொங்கல் சிறப்பு தொகுப்பை வாங்கிச் செல்கின்றனர். இச்சிறப்பு தொகுப்பை வாங்குவதற்கு ஏற்கனவே டோக்கன் முறை செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் டோக்கனை கொண்டு சென்றவுடன் தொகுப்பையும் பணத்தை வாங்கிக்கொண்டு கொரோனா நேரத்தில் பாதுகாப்போடு மீண்டு வரவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.