பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 92.1%
- IndiaGlitz, [Friday,May 12 2017]
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. இந்த முடிவின்படி தேர்வு எழுதிய 92.1 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் இந்த வருடமும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 89.3% பேர்களும் மாணவிகள் 94.5% பேர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும் இந்த ஆண்டு 1813 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இவற்றில் 292 அரசு பள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பாடவாரியாக 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை பின்வருமாறு:
இயற்பியல் - 187 பேர்
வேதியியல் - 1123 பேர்
உயிரியல் - 221 பேர்
தாவரவியல்- 22 பேர்
விலங்கியல் - 4 பேர்
கணிதம் - 3656 பேர்
புள்ளியல் - 68 பேர்
கணினி அறிவியல் - 1666 பேர்
வணிகவியல் - 8301 பேர்
வணிகக் கணிதம் - 2551 பேர்
வரலாறு -336 பேர்
பொருளாதாரம் - 1517 பேர்
வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு IndiaGlitz தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.