கமல்ஹாசன் மாய உலகில் இருக்கிறார்: தமிழிசை செளந்திரராஜன்

  • IndiaGlitz, [Monday,October 15 2018]

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரு ஆளுமை நிறைந்த தலைவர்கள் மறைந்த நிலையில் மிக எளிதில் முதல்வர் பதவியை பிடித்துவிடலாம் என பல வருடங்களாக காத்திருந்த அரசியல்வாதிகளுக்கு பேரிடியாக இருந்தது நடிகர்களின் திடீர் அரசியல் பிரவேசம். குறிப்பாக கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரின் அரசியல் வருகை அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசனின் அரசியல் குறித்து இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியதாவது:

தனது வாழ்நாளின் முக்கால்வாசி பகுதியை தனது கஜானாவை நிரப்புவதையே கொள்கையாக கொண்டவர், அந்த நேரத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இன்று அரசியல்வாதிகளை விமர்சிப்பது சிரிப்பைத்தான் வரவழைக்கின்றது. அவர் ஏதோ ஒரு மாய உலகிலும் மனக்கணக்கிலும் இருக்கின்றார். எல்லாமே சினிமா என்று அவர்கள் நினைத்து கொண்டிருக்கின்றனர். நான் கேட்கின்றேன் அப்போதெல்லாம் தமிழகத்தில் பிரச்சனையே இல்லையா? அப்போது இவர்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை' என்று தமிழிசை ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

More News

'சர்கார்' படத்திற்கு மீண்டும் புரமோஷன் செய்யும் தமிழிசை?

'சர்கார்' படத்தின் டைட்டில் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தனது கமெண்ட்டை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

படப்பிடிப்பின்போது பாலியல் தொல்லை: நடிகர் சண்முகராஜன் மீது பிரபல நடிகை புகார்

கடந்த சில மாதங்களாக நடிகைகள் உள்பட திரையுலகினர் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை தைரியமாக வெளியே கூறி வருகின்றனர்.

'தேவர் மகன் 2' சாதியை எதிர்க்கும் படமா? கமல் பதில்

'தேவர்மகன்2' அனைத்து சாதியினருக்கும் எதிரான படம்”என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சபரிமலைக்கு பெண்கள் சென்றால் கூட்டுத்தற்கொலை: சிவசேனா மிரட்டல்

சமீபத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று ஐயப்பனை வழிபடலாம் என சுப்ரீம் கோர்ட் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியது.

14 ஆண்டுகள் கழித்து சின்மயிக்கு பயம் போனது எப்படி? சீமான் கேள்வி

வைரமுத்து விவகாரம் குறித்து 14 ஆண்டுகள் கழித்து சின்மயி பேசியதன் பின்னணியில் அரசியல் இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்