காஷ்மீர் விவகாரத்தில் ரஜினியின் குரல் தமிழகத்தின் குரல்: பிரபல அரசியல்வாதி
- IndiaGlitz, [Tuesday,August 13 2019]
காஷ்மீரில் 370 ஆவது சிறப்பு அந்தஸ்தை சமீபத்தில் மத்திய அரசு நீக்கி, அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க முடிவு எடுத்துள்ளது. மத்திய அரசின் இந்த அதிரடி முடிவை தமிழகத்தில் உள்ள ஒரு சில அரசியல் கட்சிகளும், பாகிஸ்தானும் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் மற்றும் காஷ்மீரில் உள்ள உள்ளூர் மக்களும் ஆதரவு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மத்திய அரசு காஷ்மீர் விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதற்கு தன்னுடையவாழ்த்துக்கள் என்றும் கூறினார்.
ரஜினியின் இந்த கருத்து தமிழக அரசியல் தலைவர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஜினிக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல அரசியல் தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களை வந்தனர். தமிழக அரசியல்வாதிகள் பெரும்பாலும் ரஜினிக்கு எதிரான கருத்தையே தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரஜினியின் இந்த கருத்து குறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியபோது 'காஷ்மீர் விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களின் குரலாக ரஜினியின் குரல் ஒலித்து இருப்பதாக தெரிவித்திருந்தார். தமிழிசையின் இந்த கருத்துக்கு வழக்கம்போல் நெட்டிசன்கள் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.