close
Choose your channels

கட்சி நிர்வாகிகளுடன் 'காலா' படம் பார்த்த தமிழிசை

Thursday, June 7, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கட்சி நிர்வாகிகளுடன் காலா படம் பார்த்த தமிழிசை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல ரெஸ்பான்ஸ் பெற்று வருகிறது. ஊடகங்களும், சமூக வலைத்தள பயனாளிகளும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்து வருவதால் நாளை மற்றும் சனி, ஞாயிறு காட்சிகளுக்கான டிக்கெட்டுக்கள் மிக வேகமாக புக் ஆகி வருகின்றது.

இந்த நிலையில் இந்த படத்தை கோலிவுட் திரையுலகினர்களும் அரசியல்வாதிகளும் முதல்நாள் பார்த்து தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று சென்னையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் 'காலா' படத்தை தனது கட்சி நிர்வாகிகளுடன் பார்த்தார்.

பொதுவாக ரஜினி மீது அவர் ஒரு பாஜக ஆதரவாளர் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஆனால் இந்த படத்தை பார்த்தபின்னர் அந்த கருத்து மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அந்த அளவுக்கு இந்த படத்தில் பாஜக எதிர்ப்பு கருத்து உள்ளது. இருப்பினும் இந்த படம் குறித்து தமிழிசை செளந்திரராஜன் எந்தவித எதிர்மறை கருத்துக்களையும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment