உங்களால் இதை செய்ய முடியுமா? சூர்யாவுக்கு தமிழிசை கேள்வி!
Send us your feedback to audioarticles@vaarta.com
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா நேற்று ஒரு விழாவில் காட்டமாக விமர்சனம் செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
சூர்யாவின் இந்த விமர்சனத்திற்கு பாஜக பிரமுகர் ஹெச்.ராஜா ஏற்கனவே கருத்து கூறியுள்ள நிலையில் தற்போது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களும் ஒரு கருத்தை கூறியுள்ளார்.
சூர்யாவில் புதிய கல்வி கொள்கை பேச்சு குறித்து கருத்து தெரிவித்த தமிழிசை, 'கிராமப்புற ரசிகர்களுக்காக உங்கள் படத்தின் டிக்கெட் விலையை குறைப்பீர்களா? என்றும், தங்கள் படத்தின் விளம்பரத்துக்காகவும் அரசியலில் நுழைவதற்காகவும் அவசரமாக கருத்து கூறுகிறார்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சூர்யா கூறிய கல்விக்கொள்கை குறித்த கருத்துக்கு சரியான பதிலை கூறாமல் சம்பந்தம் இல்லாமல் டிக்கெட் விலையை குறைப்பீர்களா? என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளதை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com