கமல்ஹாசனால் அரசியலில் வெற்றி பெறுவது சந்தேகம்தான்: தமிழிசை
- IndiaGlitz, [Wednesday,January 17 2018]
உலக நாயகன் கமல்ஹாசன் மீது வைக்கப்பட்டிருந்த ஒரே குற்றச்சாட்டு அவர் டுவிட்டரில் மட்டுமே அரசியல் செய்கிறார் என்பதுதான். இந்த குற்றச்சாட்டையும் உடைக்கும் வகையில் அவர் தற்போது தனது அதிகாரபூர்வ அரசியல் வருகையை அறிவித்ததோடு வரும் பிப்ரவரி 21ஆம் தேதி அரசியல் கட்சி பெயரை அறிவிக்கவுள்ளதாகவும், அதனையடுத்து இராமநாதபுரத்தில் தொடங்கி தனது அரசியல் பயணத்தை தொடங்கி மக்களை நேரடியாக சந்திக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
சினிமா துறையின் இரண்டு ஜாம்பவான்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் தனித்தனியாக அரசியல் களத்தில் குதிப்பதால் தமிழக அரசியல் பரபரப்பான நிலையை எட்டியுள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசனின் அரசியல் குறித்தும் அவருக்கு மக்கள் செல்வாக்கு கிடைக்குமா? என்பது குறித்தும் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியதாவது:
சினிமாத்துறை பிரபலத்தை வைத்து மக்கள் செல்வாக்கை பெற முடியுமா என்பது சந்தேகம்தான். பிற்காலத்தில் எந்த அளவிற்கு மக்களை அவர்கள் அணுகுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மேலும் இவ்வளவு நாள் திரைத்துறையில் இருந்துவிட்டு திடீரென அரசியலுக்கு வந்தால் மக்கள் ஆதரவு பெற முடியுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.