40 ஆண்டுகளுக்கு முன் நாங்கள் நினைத்திருந்தால்? ரஜினியை சீண்டிய தமிழிசை

  • IndiaGlitz, [Monday,April 09 2018]

அண்ணா பல்கலைகழகத்திற்கு கன்னடர் ஒருவரை துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டது குறித்து நேற்று ரஜினிகாந்த் கூறியபோது, இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் பணிபுரிய உரிமை உண்டு. உயரதிகாரிகள் நியமனத்தில் அரசியல் செய்வது தவறு

ஆனால் அதே நேரத்தில் காவிரி விவகாரம் குறித்து தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் கர்நாடகாவை சேர்ந்த ஒருவரை துணைவேந்தராக நியமனம் செய்தது சரி அல்ல என்று கருத்து கூறினார்.

ரஜினியின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திராஜன், '40 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழர்கள், கர்நாடகாவை சேர்ந்தவரை நடிகராக ஏற்க மாட்டோம் என நினைந்திருந்தால் நீங்கள் சூப்பர் ஸ்டார் ஆகியிருக்க முடியுமா? வந்தாரை வாழவைக்கும் தமிழகம், திறமை யாரிடம் இருந்தாலும் பெற்றுக்கொள்ளும். இதில், மத்திய அரசுமீது குறை சொல்வது கேலிக்கூத்து என்று ரஜினியை சீண்டும் வகையில் கருத்து கூறியுள்ளார்.

தமிழிசையின் இந்த கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ரஜினி நடிகராக நடிப்பு கற்றுக்கொள்ள இங்கே வந்தார் என்றும் அவரை  மக்கள் ஏற்றுக்கொண்டதால் அவர் வென்றார் என்றும் அவரை எந்த அரசும் சூப்பர் ஸ்டாராக அரசு ஆணை மூலம் அறிவிக்கவில்லை என்றும் மக்களே அந்த பட்டத்தை கொடுத்தார்கள் என்றும் டுவிட்டர் பயனாளிகள் தெரிவித்து வருகின்றனர்.

ரஜினி, சூரப்பா, தமிழிசை, சூப்பர் ஸ்டார், அண்ணா பல்கலை, துணைவேந்தர்
Tamilisai trolled Rajinikanth in surappa issue

More News

காவிரி பிரச்சனை குறித்து சிம்புவின் ஆவேச பேட்டி

காவிரி மேலாண்மை அமைப்பதற்குநடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் சிம்பு கலந்து கொள்ளவில்லை. இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் சிம்பு செய்தியாளர்களை சந்தித்தார்.

காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம் மற்றும் 1 வெள்ளி

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் டேபிள் டென்னிஸ் போட்டியில் சிங்கப்பூரை வீழ்த்தி இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தமிழ் நடிகரின் மகன்

காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வரும் நிலையில் பிரபல தமிழ் நடிகர் மாதவன் மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத் தந்துள்ளார்.

இராண்டாண்டுகள் கழித்தும் அதே ஃபார்முலா:

பெரிய பெரிய மாஸ் ஹீரோக்களின் படங்கள் தீபாவளி பொங்கல் ரிலீஸிற்கு கொஞ்சமும் சளைக்காமல் சென்னை அணியின் ரிட்டர்ன் அமைந்தது என்றால் அது மிகையாகாது. 

கமல் எனக்கு எதிரி கிடையாது: ரஜினிகாந்த் பேட்டி

ஆன்மீக அரசியல் செய்தால் ரஜினியை எதிர்ப்பேன் என்று கமல்ஹாசன் கூறியது குறித்து ரஜினியிடம் கேட்டபோது, 'நான் கமலை எதிர்க்க மாட்டேன். அவர் என் எதிரி கிடையாது' என்று ரஜினிகாந்த் பதிலளித்தார்.