40 ஆண்டுகளுக்கு முன் நாங்கள் நினைத்திருந்தால்? ரஜினியை சீண்டிய தமிழிசை
- IndiaGlitz, [Monday,April 09 2018]
அண்ணா பல்கலைகழகத்திற்கு கன்னடர் ஒருவரை துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டது குறித்து நேற்று ரஜினிகாந்த் கூறியபோது, இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் பணிபுரிய உரிமை உண்டு. உயரதிகாரிகள் நியமனத்தில் அரசியல் செய்வது தவறு
ஆனால் அதே நேரத்தில் காவிரி விவகாரம் குறித்து தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் கர்நாடகாவை சேர்ந்த ஒருவரை துணைவேந்தராக நியமனம் செய்தது சரி அல்ல என்று கருத்து கூறினார்.
ரஜினியின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திராஜன், '40 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழர்கள், கர்நாடகாவை சேர்ந்தவரை நடிகராக ஏற்க மாட்டோம் என நினைந்திருந்தால் நீங்கள் சூப்பர் ஸ்டார் ஆகியிருக்க முடியுமா? வந்தாரை வாழவைக்கும் தமிழகம், திறமை யாரிடம் இருந்தாலும் பெற்றுக்கொள்ளும். இதில், மத்திய அரசுமீது குறை சொல்வது கேலிக்கூத்து என்று ரஜினியை சீண்டும் வகையில் கருத்து கூறியுள்ளார்.
தமிழிசையின் இந்த கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ரஜினி நடிகராக நடிப்பு கற்றுக்கொள்ள இங்கே வந்தார் என்றும் அவரை மக்கள் ஏற்றுக்கொண்டதால் அவர் வென்றார் என்றும் அவரை எந்த அரசும் சூப்பர் ஸ்டாராக அரசு ஆணை மூலம் அறிவிக்கவில்லை என்றும் மக்களே அந்த பட்டத்தை கொடுத்தார்கள் என்றும் டுவிட்டர் பயனாளிகள் தெரிவித்து வருகின்றனர்.
ரஜினி, சூரப்பா, தமிழிசை, சூப்பர் ஸ்டார், அண்ணா பல்கலை, துணைவேந்தர்
Tamilisai trolled Rajinikanth in surappa issue