கமல் ஒரு நாகரீகமான அரசியலை நடத்த வேண்டும். தமிழிசை செளந்திரராஜன்

  • IndiaGlitz, [Wednesday,March 14 2018]

பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் நேற்று கமல் கட்சியில் சேர விண்ணப்பம் செய்ததாக அக்கட்சியின் நிர்வாகிகள் ஆதாரங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து தமிழிசை செளந்திரராஜன் தனது விளக்கத்தை அளித்துள்ளார். மேலும் கமல் நாகரீக அரசியலை நடத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

கமல் ஒரு நாகரீகமான அரசியலை நடத்த வேண்டும். ஏனென்றால் நேற்றைய தினம் நான் ஒரு தகவலை சொன்னேன். கமல்ஹாசன் அவர்கள் கட்சியில் இருந்து தங்களை உறுப்பினராக சேர்த்து கொண்டிருப்பதாக ஒரு தகவல் எனக்கு வந்தது. இது எப்படி சேர்க்கின்றார்கள் என்று எனக்கு தெரியவில்லை என்று நான் கூறினேன். ஏனெனில் நான் ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர்.

இதற்கு கமல் கட்சியினர் ஒரு விளக்கம் கொடுத்துள்ளனர். ஒரு தவறு நடந்திருந்தால் அதை ஒப்புக்கொள்வதில் தவறே இல்லை . தவறு நடந்துள்ளது அதை பார்க்கின்றேன் என்று ஒரு தலைவர் கூறினால் அதை நான் ஆரோக்கிய அரசியலாக நான் எடுத்து கொண்டிருப்பேன். ஆனால் நீங்கள் தான் அப்ளை செய்தீர்கள் என்று சிறுகுழந்தைத்தனமான, இதைவிட வேறு வார்த்தையை நான் பயன்படுத்த விரும்பவில்லை. ஒரு சின்ன குழந்தைக்கு கூட தெரியும், ஒரு கட்சியின் தலைவர் இவ்வாறு அப்ளை செய்வார்களா என்று?

இப்பொழுது உள்ள தொழில்நுட்பத்தில் என்ன ஏமாற்று வேலை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். அதிகாரபூர்வமாக எனது மின்னஞ்சலில் உங்களது உறுப்பினர் எண் வந்துள்ளது, இதற்கு பதில் சொல்லுங்கள், 'என்று தமிழிசை செளந்திரராஜன் கூறியுள்ளார்.

More News

ரிஜிஸ்தர் திருமணம் செய்யும் காதலர்களுக்கு திடீர் சிக்கல்:

பெற்றோர்களுக்கு தெரியாமல் ரிஜிஸ்தர் திருமணம் செய்யும் காதலர்களுக்கு கிடுக்கிப்பிடியாக இனிமேல் ரிஜிஸ்தர் திருமணம் செய்து கொள்பவர்கள் பெற்றோர் அனுமதியை பெற வேண்டும்

டிரெக்கிங் கிளப் உரிமையாளர் வீட்டில் போலீஸார் திடீர் சோதனை

தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்னும் ஒருசிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இரண்டு திரையுலக மேதைகளின் படத்தில் சாந்தனு

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் இந்தியாவின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் படத்தில் சாந்தனு நடிக்கவுள்ளார்.

மனைவியால் குற்றம் சாட்டப்பட்ட ஷமிக்கு ஆதரவு கொடுத்த தல

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி, பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக பகீர் குற்றச்சாட்டை அவரது மனைவி ஹாசின் ஜகான் கூறினார்

திடீர் திருப்பம்: பி.எஸ்.என்.எல் வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுவிப்பு

பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பு வழக்கில் இருந்து மாறன் சகோதரர்களான கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்