நாங்கள் பொங்கினால் தமிழகம் தாங்காது: தமிழிசை பொங்கியது ஏன்?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் பொதுவாக செய்தியாளர்களிடம் பேசும்போது அமைதியாக பேசுவார். ஆனால் இன்று நாங்கள் பொங்கினால் தமிழகம் தாங்காது என்று அவரே பொங்கி பேசியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
வி.எச்.பியின் ரத யாத்திரைக்கு திமுக உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பு, மார்ச் 7ஆம் தேதியன்று கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது மற்றும் நேற்றிரவு மீண்டும் பாஜக மாவட்ட தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது ஆகியவைகளுக்கு கண்டனம் தெரிவித்த தமிழிசை, இதுவே பாஜகவினர் மீதான கடைசி தாக்குதலாக இருக்க வேண்டும் என்றும், இனிமேலும் பொறுத்து கொள்ள முடியாது என்றும் நாங்கள் பொங்கி எழுந்தால் தமிழகம் தாங்காது என்றும் ஆவேசமாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்து கடவுள்களான ராமர், சீதையின் ரதம் தமிழகத்திற்குள் வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சியினர்களுக்கு இந்துக்கள் வாக்களிக்க கூடாது என்ற முடிவை எடுக்க வேண்டும் என்றும், பெரியார் பிறந்தது பெரிதா? அல்லது நாயன்மார்கள் ஆழ்வார்கள் பிறந்தது பெரிதா என்று வரும் காலத்தில் பார்ப்போம் என்றும் தமிழிசை கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com