தமிழிசை இப்படி செய்திருக்கலாம்:

  • IndiaGlitz, [Tuesday,September 04 2018]

ஜனநாயக நாட்டில் ஒரு கட்சிக்கோ, தலைவருக்கோ எதிர்ப்பு தெரிவிப்பது என்பது ஜனநாயக உரிமை. பாரத பிரதமர் தமிழகம் வந்தபோதே எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டியவர்கள் தமிழர்கள். எனவே எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீதெல்லாம் வழக்கு போட்டால் நாட்டில் உள்ள அனைவர் மீதும் வழக்கு தொடுக்க வேண்டிய நிலை வரும்

தனது கட்சியை, கட்சி தலைவரை, தனது கட்சியின் ஆட்சியை ஒரு பெண் பொது இடத்தில் குறை சொல்வதால் அந்த கட்சியின் மாநில தலைவர் என்ற முறையில் தமிழிசைக்கு வந்த கோபம் நியாயமானதே. ஆனால் அந்த இடத்தில் அவர் கொஞ்சம் பெருந்தன்மையாக ஒரு கட்சியின் தலைவர் என்ற வகையில் சகிப்புத்தன்மையுடன் நடந்திருக்கலாம்

தனக்கு எதிராக கூச்சல் போட்ட சோபியாவை அருகில் அழைத்து சற்றே கனிவுடன், சரிம்மா! உங்க எதிர்ப்பைப் பதிவு செய்துட்டீங்க. இது போதும்' என்று அமைதியாக அவரிடம் கூறியிருந்தால் தமிழிசை மீது சோபியாவுக்கே ஒரு மரியாதை வந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கின்றது. மேலும் இந்த விஷயம் ஒரு ஐம்பது பேருடன் முடிந்திருக்கும். தமிழிசை பொறுமை இழந்து, ஒரு தலைவர் என்பதையும் மறந்து செயல்பட்டதோடு, காவல்துறையில் புகார் கொடுத்து கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டதால் தற்போது இந்த விஷயத்தை உலகமே உற்று கவனிக்கின்றது.

சோபியாவின் செயலை யாரும் நியாயப்படுத்தவில்லை. ஒரு விமானப்பயணி, விமான நிறுவனத்தின் விதிமுறையின்படி மற்ற பயணிகளுக்கு தொந்தரவு இல்லாமல் நடந்து கொள்வது அவசியம். அதே நேரத்தில் தமிழிசையும் கொஞ்சம் பொறுமையை கடைபிடித்திருக்கலாம் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.