தமிழிசை-சோபியா விவகாரம்: 10 மொழிகளில் டிரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்குகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் பயணம் செய்த விமானத்தில் பயணம் செய்த சோபியா என்ற இளம்பெண் 'பாஸிச பாஜக ஒழிக' என்று கோஷமிட்ட் விவகாரம் தற்போது பூதாகரமாகிவிட்டது. இந்த விஷயத்தை தமிழிசை அவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால் மீடியாக்களுக்கு கூட தெரியாமல் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே தெரிந்திருக்காது. ஆனால் சோபியாவுடன் விமான நிலையத்தில் தமிழிசை வாக்குவாதம் செய்ததோடு போலீஸ் புகாரும் அளித்துள்ளதால் தற்போது சோபியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஏற்கனவே பாஜக மீது தமிழக வாக்காளர்களுக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது. அதனால்தான் பாஜக நோட்டாவுடன் கூட மோதி ஜெயிக்க முடியவில்லை. இந்த நிலையில் தமிழக அளவில் ஆரம்பித்த இந்த விவகாரம் குறித்த ஹேஷ்டேக் தற்போது பத்து மொழிகளில் அகில இந்திய அளவில் டிரெண்டிங்கில் உள்ளது. பாஜகவுக்கு இது தேவையா? என்றுதன் எண்ண தோன்றுகிறது.
மேலும் தற்போது காவிரி பிரச்சனை உள்ளிட்ட எந்த பிரச்சனையும் இல்லாததால் போராட்டம் செய்ய முடியாமல் குழப்பத்தில் இருந்த எதிர்க்கட்சிகள் சோபியா விவகாரத்தை கையில் எடுக்க தொடங்கிவிட்டனர். ஏற்கனவே திமுக தலைவர் டுவிட்டரில் இந்த சம்பவத்திற்கு கண்டனமும், அம்முக தலைவர் டிடிவி தினகரன் கண்டன அறிக்கையும் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் இந்த விஷயத்தை கூடிய சீக்கிரம் ஒரு சுமூக முடிவுக்கு கொண்டு வர பாஜக முயற்சித்தால் அந்த கட்சியின் எதிர்காலத்திற்கு நல்லது என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout