தமிழிசை ஒரு விஞ்ஞானி: கமல்ஹாசன் கிண்டல்

  • IndiaGlitz, [Friday,November 23 2018]

சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கிய கமல்ஹாசனுக்கும் அதிமுக அமைச்சர்களுக்கும் இடையே சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வப்போது வாக்குவாதங்கள் நடந்து வருவது வழக்கமாக உள்ளது. அதேபோல் கமல் மற்றும் பாஜக தலைவர்களிடையே விமர்சனங்கள் பரிமாறப்படுவதும் உண்டு.

அந்த வகையில் சமீபத்தில் கஜா புயலை ஆய்வு செய்த பின்னர் கமல்ஹாசன் கூறியபோது, 'கஜா புயலால் குடிசை வீடுகள் தான் அதிகம் பாதிப்பு அடைந்துள்ளது. ஏழைகள் ஏழையாகவே இருக்க ஆட்சியாளர்கள் செயல்படுகின்றனர்' என்று கூறினார்.

கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், 'தற்போது ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கமல்ஹாசன் அதனை முடிக்கட்டும், பிறகு பார்ப்போம்' என்று கூறியுள்ளார். இதற்கு கிண்டலுடன் பதிலளித்த கமல்ஹாசன், 'தமிழிசை தான் விஞ்ஞானி, அவர்தான் ஆராய்ச்சி செய்வார். நான் சமூக ஆர்வலர், நான் என் வேலையை செய்கிறேன்' என்று கூறியுள்ளார்.

வழக்கம்போல் இருவரின் கருத்துக்களையும் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் 'சபாஷ் சரியான போட்டி' என கிண்டலடித்து வருகின்றனர்.

 

More News

கிறிஸ்துமஸ் ரிலீஸ் பட்டியலில் இணைந்த இன்னொரு படம்

வரும் கிறிஸ்துமஸ் திருநாள் விடுமுறை தினத்தில் ஏற்கனவே 'மாரி 2', 'சீதக்காதி' உள்பட ஒருசில திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த பட்டியலில் இன்னொரு படமும் இணைந்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர்களுக்கு இதெல்லாம் புரியாது: பிரபல நடிகருக்கு ரேவதி கண்டனம்

மீடூ ஒரு விளம்பர இயக்கம் என்று ஒருசிலரும், பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளியே கூற கிடைத்திருக்கும் வாய்ப்பு என்று ஒருசிலரும் கூறி வருகின்றனர்.

எனக்கா ரெட் கார்டு, எடுத்து பாரு என் ரெக்கார்டு? சிம்பு

சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'விஸ்வாசம்' படத்தின் ஒருவருட கொண்டாட்டம்: டிரண்ட் ஆக்கிய அஜித் ரசிகர்கள்

ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆகி ஒரு வருடம், இரண்டு வருடம், ஐந்து வருடம், பத்து வருடம் ஆகியதை கொண்டாடி வரும் வழக்கம் தற்போது சினிமா ரசிகர்களிடையே டிரண்ட் ஆகியுள்ளது.

50வது நாளை காணும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆன படங்கள்

கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் வெளியாகி வந்தாலும் அதில் உண்மையான வெற்றி பெறும் படங்கள் விரல்விட்டு எண்ணும் வகையில் தான் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறது.