'மெர்சலை அடுத்து விஸ்வரூபம் 2' படத்திற்கும் புரமோஷன் செய்யும் தமிழிசை-எச்.ராஜா

  • IndiaGlitz, [Monday,November 06 2017]

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வெற்றியை பெற்று அபார வசூலை குவித்ததற்கு தமிழக பாஜக தலைவர்கள் கொடுத்த இலவச விளம்பரம் ஒரு முக்கிய காரணம். இதை படக்குழுவினர்களே ஏற்று கொள்வார்கள். இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் உள்பட பலரும் தங்கள் படத்திற்கும் புரமோஷன் செய்யுங்கள் என்று தமிழக பாஜக தலைவர்களை கலாய்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், நேற்று பதிவு செய்த ஒரு டுவிட்டில், 'இந்துதீவிரவாதம் என்று கொளுத்திப்போடுவது சுயரூபமா? இல்லை விஸ்வரூபம் 2 புதுப்படம் ஓட வைக்க பொய் விஸ்வரூபமா? என்று கூறியுள்ளார்.

தமிழிசையின் இந்த கருத்துக்கு பதில் கூறியுள்ள பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா, 'முதுகெலும்பு இல்லாத, தொடை நடுங்கியின் பிதற்றல் அவ்வளவுதான். பி ஜே இவரின் கோழைத்தனத்தை தோலுரித்துக் காட்டிவிட்டார்' என்று கூறியுள்ளார்.

இந்த இரண்டு டுவீட்டுகளுக்கும் கமல் ரசிகர்கள் மீம்ஸ் மூலம் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு ரசிகர், 'மெர்சல் படத்தை அடுத்து விஸ்வரூபம்2 பட புரொமோசனில் ராஜா, தமிழிசை ஈடுபட்டுள்ளனர்' என்று கலாய்த்துள்ளார்.

More News

காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு நன்றி கூறிய ஷாருக்கான்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடியபோது இந்திய திரையுலகமே அவருக்கு நேரிலும் சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்து கூறியது.

தினத்தந்தி பவளவிழாவில் ரஜினி! பிரதமர் மோடியுடன் சந்திப்பா?

பாரத பிரதமர் நரேந்திரமோடி இன்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெறும் தினந்தந்தி பவளவிழாவில் கலந்து கொள்கிறார். இன்னும் சற்று நேரத்தில் இந்த விழா தொடங்கவுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கிறார் பிரதமர் மோடி

தினத்தந்தி பவளவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று சென்னை வரும் பிரதமர் மோடி திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஒரு திரைப்படம் தணிக்கை செய்ய 68 நாட்களா? சீனுராமசாமி கண்டனம்

ஒரு திரைப்படம் தணிக்கை செய்வதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை சமீபகாலமாக நடைமுறையில் இருந்து வரும் நிலையில் தற்போது தணிக்கை வாரியம் புதிய நிபந்தனை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பிரபுதேவாவின் 2ஆம் பாக படத்தில் நிக்கி கல்ராணி

பிரபுதேவா, பிரபு, காயத்ரி ரகுராம், உள்ளிட்ட பலர் நடித்த சார்லி சாப்லின் திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியானது. இந்த நிலையில் 15 வருடங்களுக்கு பின்னர் இந்த படத்தின் 2ஆம் பாகம் தற்போது உருவாகவுள்ளது.