விஷால் என்ன ரஜினியா? பொங்கிய தமிழருவி மணியன்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒருபக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போர் வரட்டும் என்று அரசியலுக்கு வருவதாக பல வருடங்களாக கூறி வருகிறார். இன்னொரு பக்கம் உலக நாயகன் கமல்ஹாசன் தான் அரசியலுக்கு வந்துவிட்டதாகவே கூறி வருகிறார். ஆனால் இருவரும் இன்னும் அரசியல் களத்தில் நேரடியாக குதிக்காத நிலையில் நடிகர் விஷால் அதிரடியாக ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் நேரடி அரசியலில் குதித்துவிட்டார்.
விஷாலின் இந்த அதிரடி முடிவை சற்றும் எதிர்பார்க்காத அரசியல்வாதிகள் தற்போது விஷாலுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே விஷால் இந்த தேர்தலில் டெபாசிட் இழப்பார் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியதை பார்த்தோம். இந்த நிலையில் ரஜினியின் அரசியல் வரவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் தமிழருவி மணியன் இதுகுறித்து கூறியபோது, 'விஷால் எல்லாம் ரஜினியாக முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அரசியலில் ஈடுபடுவது பற்றி ரஜினிகாந்த் விரைவில் முறையாக அரிவிப்பார் என்றும் அவர் கூறினார்.
மேலும் விஷாலின் அரசியல் அதிரடி குறித்து கருத்து கூறிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், 'நடிகர் சங்க தேர்தல், தயாரிப்பாளர் சங்க தேர்தல் வெற்றிகளை பெரிதாக எடுத்துக்கொள்ள முடியாது சினிமா டிக்கெட் வேறு, அரசியல் டிக்கெட் வேறு' என்று கூறியுள்ளார். மேலும் 'விஷால் திரைத்துறை சார்ந்த பிரச்னைகளை முதலில் தீர்க்கட்டும், அரசியலை பார்த்துக் கொள்ள தலைவர்கள் பலருடன் நாங்கள் இருக்கிறோம்' என்று கூறியுள்ளார்
மேலும் விஷால் போட்டியிடுவது குறித்து நாஞ்சில் சம்பத் கூறியபோது, 'எங்களுக்கும், திமுகவுக்கும் மட்டுமே போட்டி, விஷாலை நாங்கள் போட்டியாளராக கருதவில்லை' என்று கூறியுள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments