அரசியலில் கமல் இன்னொரு சிவாஜியாக மாறக்கூடும்: தமிழருவி மணியன்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டிசம்பர் 26 முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திப்பது உறுதியாகியுள்ளது. இந்த ஆறுநாட்களிலும் தகுந்த பாதுகாப்பு தேவை என ரஜினி ரசிகர்கள் மன்றம் சார்பில் காவல்துறையினர்களிடம் மனு அளித்திருப்பதில் இருந்தே இந்த நிகழ்ச்சி உறுதியாகியுள்ளது என்பது தெரியவருகிறது.
இந்த நிலையில் டிச. 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களுடனான சந்திப்பின் போது தனது அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி நிச்சயம் அறிவிப்பார் என்று காந்தி மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர்களிடம் தமிழக மக்களின் பிரச்சனைகள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் ஆலோசனை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்
இந்த நிலையில் கமல்ஹாசன் அரசியல் குறித்து கருத்து தெரிவித்த தமிழருவி மணியன், 'அதிமுக மற்றும் பாஜகவுடன் கமல்ஹாசன் இணைந்து செயல்பட வாய்ப்பு இல்லை என்றும் அதே நேரத்தில் கமல்ஹாசன் தனியாக நின்றால் இன்னொரு சிவாஜியாக மாறிவிடக்கூடும் என்றும் கருத்து தெரிவித்தார். மேலும் ரஜினியுடன் இணைந்து செயல்படுவதா, இல்லையா என்பது பற்றி கமல்தான் முடிவு செய்ய வேண்டும்' என்றும் அவர் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout