ரஜினி-தமிழருவி மணியன் சந்திப்பு: அரசியல் கட்சி அறிவிக்கும் தேதி குறித்த தகவல்

  • IndiaGlitz, [Friday,December 22 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இம்மாதம் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை திட்டமிட்டுள்ள நிலையில் சற்றுமுன்னர் அவரை அவரது அரசியல் ஆலோசகர் தமிழருவி மணியன் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய தமிழருவி மணியன், டிசம்பர் 26 முதல் 31 வரையிலான நாள்களில் ஏதேனும் ஒரு நாளில் ஊடகங்களைச் சந்தித்து ரஜினியே அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும், ரஜினியின் அறிவிப்புக்கு முன்பாக ஊடகங்களிடம் தன்னால் எதையும் தெரிவிக்க இயலாது என்றும் கூறினார்

ஏற்கனவே ரஜினியின் சகோதரர் ரஜினி வரும் ஜனவரி மாதம் அரசியல் அறிவிப்பு குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறிய நிலையில் தற்போது தமிழருவி மணியன் அவர்களும் கிட்டத்தட்ட அதே கருத்தை கூறியுள்ளார்

எனவே இந்த முறை ரஜினி தனது ரசிகர்களையும் பொதுமக்களையும் ஏமாற்றாமல் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் என்ன நடக்க போகிறது என்பதை வரும் 31ஆம் தேதி வரை பொறுமை காப்போம்

 

More News

ஆர்.கே.நகரை விட்டு ஓட்டமெடுக்கும் பொதுமக்கள்: அரசியல்வாதிகள் பயமுறுத்தலா?

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேற்று நடைபெற்று முடிவடைந்த நிலையில் வரும் 24ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இந்த நிலையில்

அஜித், விஜய், சூர்யாவை முந்திய ஏ.ஆர்.ரஹ்மான்

உலகப்புகழ் பெற்ற ஃபோர்ப்ஸ் பத்திரிகை 2017ஆம் ஆண்டின் டாப் 100 நட்சத்திரங்கள் பட்டியல் ஒன்றை சற்றுமுன் வெளியிட்டுள்ளது.

போன வாரம் 'அருவி', இந்த வாரம் 'அறிவு': உறவுக்காரர்கள் பெற்ற வெற்றிகள்

கடந்த வாரம் வெளியான 'அருவி' சூப்பர் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இன்று இரண்டு புதிய படங்கள் வெளியான போதிலும் 'அருவி' படம் இன்னும் சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதில் இருந்தே இந்த படத்திற்கு

விக்ரமின் 'சாமி 2': மீண்டும் போலீஸ் கேரக்டரில் பிரபல நடிகை

இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள சாமி' படத்தின் இரண்டாம் பாகமான 'சாமி 2' படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ள நிலையில்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு. விஷால் நேரில் ஆஜர்

நடிகர் ராதாரவி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சற்றுமுன்னர் நடிகரும், நடிகர் சங்க செயலாளருமான விஷால் ஆஜரானார். நீதிமன்றத்தில் உறுதி அளித்ததற்கு மாறாக தன்னை நடிகர் சங்க பொதுக்குழுவில்