கமலுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் அரசியல் கட்சி தலைவர்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட கூட்டணி, வேட்பாளர்களை அறிவித்து அதிமுக, திமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளும் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் மற்ற கட்சிகள் இன்னும் வேட்பாளர்களையே அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் கமல்ஹாசன் கட்சியான மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டி என்ற முடிவை எடுத்து, வேட்பாளர்கள் தேர்வில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றது. 40 மக்களவை தொகுதிக்கும், 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் வரும் 20ஆம் தேதி கமல்ஹாசன் வேட்பாளர்களை அறிவிக்கவுள்ளார்.

இந்த நிலையில் சற்றுமுன் இந்திய குடியரசு கட்சி தலைவர் திரு செ.கு.தமிழரசன் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கமல் கட்சியுடன் இந்திய குடியரசு கட்சி வரும் தேர்தலில் கைகோர்க்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

More News

சி.கே.குமரவேல் விலகல்: மக்கள் நீதி கட்சி விளக்கம்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அக்கட்சியின் பிரமுகர் சி.கே.குமரவேல் விலகியுள்ள நிலையில் இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது 

தேர்தல் 2019: நடிகை ரோஜாவுடன் மோதும் விஜயகாந்த் பட நடிகை?

நாடு முழுவதும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளது,

திமுகவில் இணையும் முன்னாள் அதிமுக அமைச்சர்

1991 முதல் 1996 வரை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது  பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் அ.தி.மு.க.வில் இருந்து விலகியுள்ளார். 

கமல் கட்சியின் முக்கிய நிர்வாகி திடீர் விலகல்! நடிகையுடன் கருத்துவேறுபாடு காரணமா?

மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர் குமாரவேல் என்பவர் அக்கட்சியிலிருந்து விலகுவதாக கமல்ஹாசனிடம் கடிதம் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

தேமுதிகவின் 4 தொகுதி வேட்பாளர்கள் இவர்கள்தான்!

அதிமுக கூட்டணியில் பெரும் பரபரப்புக்கு பின்னர் இணைந்த தேமுதிக, 4 தொகுதிகளை மட்டும் வேண்டா வெறுப்புடனும் வேறு வழியின்றியும் பெற்றது.