என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்.. விஜய்யின் இரண்டாவது அறிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து இருப்பதாக சமீபத்தில் அறிக்கை வெளியிட்ட நிலையில் இந்த அறிக்கையை அடுத்து தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் விஜய்யின் அரசியல் வருகைக்கு திமுக, அதிமுகவில் உள்ள பிரபல தலைவர்கள் உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பதும் அதேபோல் கமல்ஹாசன் உட்பட பல திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர் என்பதையும் பார்த்தோம்.
மேலும் அவர் தனது அறிக்கையில் வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் தனது கட்சி போட்டியிடவில்லை என்றும் யாருக்கும் ஆதரவில்லை என்றும் தெளிவாக கூறியிருந்தார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தான் தனது அரசியல் பிரவேசம் என்பதையும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக வெளியிட்ட அறிக்கை பின்னர் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்த நிலையில் அந்த வாழ்த்துக்கு தற்போது விஜய் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த பெருமதிப்பிற்குரிய பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர சகோதரிகள், ஊக்கம் அளிக்கும் ஊடகவியலாளர்கள், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள் என்று தெரிவித்துள்ளார்.
Thalaivar @actorvijay Sir.!@tvkvijayoffl @TVMIoffl @Jagadishbliss @RIAZtheboss#தமிழகவெற்றிகழகம் #TVKVijay pic.twitter.com/OOJNOYkAtM
— Bussy Anand (@BussyAnand) February 4, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments