யூடியூபர் பிரியாணிமேன் கைது ஏன்? காவல்துறை விளக்கம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
யூடியூபர் பிரியாணி மேன் என்ற அபிஷேக் ரபி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் இது குறித்து காவல்துறை விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:
சென்னை செம்மொழி பூங்கா மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் யூடியூப்பில் வீடியோ பதிவிட்ட நபர் கைது.
நேற்று (29.07.2024), சென்னை பெருநகர காவல், தெற்கு மண்டல கணினிசார் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தேனாம்பேட்டையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கொடுத்த புகாரில், தான் தினந்தோறும் காலையில் நடைபயிற்சி செய்யும் செம்மொழி பூங்காவின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஆபாசமான உடல்மொழி சைகளை வீடியோ பதிவு செய்து அந்த காணொளியை யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ள பிரியாணி மேன் என்ற யூடியூப் சேனல் நடத்தி வரும் அபிஷேக் ரபி என்பவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி குறிப்பிட்டிருந்தார்.
மேற்படி புகாரின் அடிப்படையில், தெற்கு மண்டல கணினிசார் காவல் நிலையத்தில் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட சில சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
தெற்கு மண்டல கணினிசார் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, செம்மொழி பூங்காவின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் ஆபாசமான உடல் அசைவு சைகைளைக்காட்டி, கொச்சை வார்தைகளுடன் யூடியூப்பில் வீடியோ பதிவேற்றம் செய்த எதிரி அபிஷேக் ரபி, வ/29 என்பவரை நேற்று (29.07.2024) செய்தனர்.
விசாரணைக்குப் பின்னர் எதிரி அபிஷேக் ரபி நேற்று (29.07.2024) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
🌐Tamil YouTuber ‘Biriyani Man’ (Abbishek Rabi) has been arrested by the Chennai Cyber Crime Police.
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) July 30, 2024
⚖️He faces charges under sections of Bharatiya Nyaya Sanhita, IT Act, Indecent representation of women Act 1986 and The Sexual Harassment of Women Act, 2013.
📱Let’s stand… pic.twitter.com/IkzzirTMup
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com