டுவிட்டர் ஓனர் எலான் மஸ்க் இடம் கோரிக்கை வைத்த தமிழ் இயக்குனர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகின் முன்னணி சமூக வலைதளமான டுவிட்டரை 43 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கிய தொழிலதிபர் எலான் மஸ்க் இடம் இளம் தமிழ் இயக்குனர் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழ் திரையுலகின் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன், ‘துருவங்கள் பதினாறு’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து அவர் ’நரகாசுரன்’ என்ற படத்தை இயக்கினார். அரவிந்த்சாமி, ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் ரிலீசுக்கு தயாராகி பல ஆண்டுகள் ஆன பின்னரும் ஒருசில பொருளாதார பிரச்சினை காரணமாக ஐந்து ஆண்டுகளாக ரிலீசாகாமல் உள்ளது
இந்த படத்தை அடுத்து இயக்குனர் கார்த்திக் நரேன், ‘மாஃபியா’, ‘மாறன்’ ஆகிய படங்களையும் இயக்கி முடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ட்விட்டர் ஓனர் எலான் மஸ்க்கிடம் தன்னுடைய ’நரகாசுரன்’ படத்தை வாங்கி ரிலீஸ் செய்யும்படி கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கை குறித்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இந்த படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் முயற்சிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Some clarity on when this is gonna see the light of the day will be really helpful sir. And yes, this film is very very close to my heart! pic.twitter.com/1eFoEFub3u
— Karthick Naren (@karthicknaren_M) November 3, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments