சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதினை தட்டிச் சென்ற தமிழ் எழுத்தாளர்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய மொழிகளின் வளத்தினை மேம்படுத்தும் நோக்கில் இந்திய அரசு தேசிய அளவில் 24 மொழிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாதமி விருதுகளை வழங்கி வருகிறது. நாவல், சிறுகதை, சிறந்த மொழிபெயர்ப்பு என ஆறு துறைகளுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப் படுகிறது. அதில் சிறந்த மொழிபெயர்ப்புக்காக தமிழ் எழுத்தாளர் மொழிபெயர்த்த நூலிற்கு விருது அறிவிக்கப் பட்டிருப்பது மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்த ஆண்டிற்கான சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான விருது எழுத்தாளர் கே.வி. ஜெஸ்ரீ க்கு அறிவிக்கப் பட்டுள்ளது. மலையாள எழுத்தாளரான மனோஜ் குரூரின் நாவலை மொழிபெயர்த்து 2016 இல் ”நிலம் பூத்து மலர்ந்த நாள்” என்ற நாவலை வம்சி பதிப்பகம் வெளியிட்டது. தற்போது இந்த நூலுக்குத்தான் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
வளர்ந்து வரும் மலையாள எழுத்தாளரான மனோஜ் குரூரின் நாவல் பண்டைய தமிழ் மன்னன் பாரியின் படுகொலையை எழுத்துக் களமாக கொண்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.
கே.வி. ஜெயஸ்ரீ கேராளவை பூர்வீகமாகக் கொண்டவர் என்றாலும் சிறுவயது முதல் திருவண்ணாமலையில் வாழ்ந்து வருகிறார். பள்ளி, கல்லூரி படிப்புகளை திருவண்ணாமலையில் முடித்திருக்கிறார். தற்போது பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது. மேலும் பல மலையாள படைப்புகளை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இவரது கணவர் உத்திரகுமார் அரசியல் விமர்சகர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments