'தளபதி 62' படத்தில் இணைந்த கமல்-ரஜினி படங்களின் பிரபலம்

  • IndiaGlitz, [Monday,January 22 2018]

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்', சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' உள்பட பல திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன். இவர் தற்போது விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 62' படத்தில் இணைந்துள்ளார்.

தளபதி 62' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஈசிஆர் அருகே பிரமாண்டமான படகுகளுடன் கூடிய அரங்கில் நடைபெற்று வருகிறது., இந்த நிலையில் இந்த படத்தில் மீனவர்களின் பிரச்சனைகள் குறித்த கூர்மையான வசனங்கள் தேவை என்பதால், மீனவர்களின் வாழ்க்கை முறைகளை நன்கு அறிந்த நாகர்கோவிலை சேர்ந்த எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படத்தின் வசனகர்த்தாவாக இணைக்கப்பட்டுள்ளார். இதனால் இந்த படத்தின் வசனங்கள் மண்ணின் மணத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், கீர்த்தி சுரேஷ், யோகிபாபு, உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை பிரமாண்டமாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

 

More News

ரஜினி, கமலை அடுத்து தீவிர அரசியலில் குதித்த இன்னொரு நடிகர்

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் கோலிவுட் திரையுலகில் இருந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலில் குதித்துள்ளனர். மேலும் இன்னும் ஒருசில நடிகர்களும் அரசியலில் குதித்த தயாராகி வருகின்றனர்.

மோகினி படத்தில் 55 நிமிடங்கள் கிராபிக் காட்சிகள்: இயக்குனர் மாதேஷ்

ஒரு திரைப்படத்தின் ரன்னிங் டைம் சுமார் 2 மணி நேரம் என்று இருக்கும் நிலையில் அதில் கிட்டத்தட்ட பாதி அளவுக்கு கிராபிக்ஸ் காட்சிகளால் நிறைந்துள்ளது த்ரிஷாவின் திகில் படமான மோகினி'

முழுக்க முழுக்க வெளிப்புற படப்பிடிப்பில் உருவான முதல் படம்

இன்டீரியல் காட்சிகள் ( சுவற்றிற்குள் ) இல்லாமல் படம் முழுக்க எக்ஸ்டீரியல் என்று சொல்லப்படும் வெளிப் புறங்களிலேயே படமாக்கப்பட்ட முதல் படம் இந்த பக்கா.

இன்று முதல் தொடங்கும் தனுஷின் புதிய படத்தின் படப்பிடிப்பு

தனுஷ் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வடசென்னை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அரசியல் அறிவிப்புக்கு பின் ரஜினி அறிவித்த முதல்கட்ட நிர்வாகிகள் லிஸ்ட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த இருபது ஆண்டுகளாக அரசியலுக்கு வருவதாக கூறி கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது அரசியல் வருகையை உறுதி செய்தார்.