உலகிலேயே முதல் முயற்சி.. திரைப்படமாக மாற்றப்பட்ட தமிழ் வெப்சீரிஸ்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஓடிடி தளத்தில் ஒளிபரப்பான வெப்சீரிஸ் உலகிலேயே முதல்முறையாக திரைப்படமாக மாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
விமல் நடிப்பில், பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவான வெப்சீரிஸ் 'விலங்கு’. இந்த வெப்சீரிஸ் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஜீ 5 தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது என்பதும் இந்த தொடருக்கு மிகப்பெரிய ஆதரவு ரசிகர் மத்தியில் கிடைத்தது என்பது தெரிந்ததே.
மொத்தம் ஏழு எபிசோடுகள் கொண்ட இந்த வெப்சீரிஸ் சஸ்பென்ஸ் கதை அம்சம் கொண்டது என்பதால் அனைவரும் ரசித்து பார்த்தனர். விமல், இனியா, பாலசரவணன், முனீஷ்காந்த் உள்பட பலரது நடிப்பில் உருவான இந்த வெப்சீரிஸ், அஜேஷ் இசையில் உருவானது.
இந்த நிலையில் 7 எபிசோடுகள் ஆக ஒளிபரப்பான ’விலங்கு’ வெப்சீரிஸ் தற்போது திரைப்படமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் இந்த திரைப்படம் ஜீ தமிழ் சேனலில் ஜனவரி 8ஆம் தேதி ஒளிபரப்பாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘விலங்கு’ வெப்சீரிஸ், திரைப்படத்திற்கு ஏற்றவாறு எடிட் செய்யப்பட்டுள்ள நிலையில் தொலைக்காட்சியிலும் இந்த ’விலங்கு’ நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The cops 😎
— Zee Tamil (@ZeeTamil) January 4, 2023
உலகின் முதல் மெகா ஹிட் வெப் சீரிஸ் திரைப்படம்
விலங்கு | ஜனவரி 8 | ஞாயிறு மதியம் 1 மணிக்கு#VIlangu #Vemal #Ineya #Munishkanth #KichchaRavi #ZeeTamil pic.twitter.com/sN8vijr8qQ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com