பிரபல தமிழ் திரையுலகின் வில்லன் நடிகருக்கு கொரோனா: விரைவில் குணமடைவேன் என டுவீட்!
- IndiaGlitz, [Saturday,March 13 2021]
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது, தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களுக்கு இந்த எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கொரோனா வைரஸ் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலருக்கும் தாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஏற்கனவே பல திரையுலக பிரபலங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, அதன்பின் குணமான நிலையில் தற்போது தமிழ் திரையுலகின் பிரபல வில்லன் நடிகர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது
ரஜினிகாந்த் நடித்த ’பாபா’ உள்பட பல திரைப்படங்களில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்தவர் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் தனக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இது நான் விரும்பாத ஒன்றும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று, எனவே என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது எனக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை என்றும், விரைவில் குணமடைந்து விடுவேன் என நம்புகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்