விஜய்சேதுபதி அணிக்கு கிடைத்த முதல் வெற்றி

  • IndiaGlitz, [Monday,October 08 2018]

ஒவ்வொரு ஆண்டும் புரோ கபடி போட்டிகள் நடந்து வருவது தெரிந்ததே. கடந்த ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசன், தமிழ் தலைவாஸ் அணிக்கு விளம்பர தூதராக இருந்தார். இந்த நிலையில் இந்த ஆண்டு தமிழ் தலைவாஸ் அணிக்கு நடிகர் விஜய்சேதுபதி தூதராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது ஏற்கனவே அறிந்ததே.

இந்த நிலையில் நேற்று முதல் இந்த ஆண்டுக்கான புரோ கபடி போட்டிகள் சென்னையில் ஆரம்பமானது. கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் முதல் போட்டியை தொடங்கி வைத்தார். முதல் போட்டியில் தமிழ்தலைவாஸ் மற்றும் பாட்னா அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 42-26 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னாவை வீழ்த்தியது. இதனால் தமிழ் தலைவாஸ் அணி 5 புள்ளிகளை பெற்றது.

நேற்றைய போட்டியை நடிகர் விஜய்சேதுபதி நேரில் காண வந்து தமிழ் தலைவாஸ் வீரர்களை உற்சாகப்படுத்தினார். வெற்றி பெற்றவுடன் வீரர்கள் அனைவருக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார். இந்த நிலையில் இன்று தமிழ் தலைவாஸ் அணி, உபி அணியுடன் மோதவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'ஜருகண்டி' ரிலீஸ் தேதி அறிவிப்பு: பிக்பாஸ் டேனியலுக்கு திருப்பம் ஏற்படுமா?

ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜருகண்டி' படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

விஷால் பாணியில் களத்தில் இறங்கிய வரலட்சுமி

கமல் பாணியில் விஷாலும் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்பதும், அந்த நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இன்றுமுதல் ஒளிபரப்பாகவுள்ளது என்பதும் தெரிந்ததே

விஜய்சேதுபதிக்காக விஷால் எடுத்த அதிரடி நடவடிக்கை

விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96' ரிலீசின்போது இந்த படத்தின் தயாரிப்பாளருக்கும் விஷாலுக்கும் இடையே பைனான்ஸ் பிரச்சனை ஏற்பட்டதாகவும்,

விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல்: காவல்துறையில் புகார் செய்ய காமெடி நடிகர் முடிவு

கடந்த இரண்டு நாட்களாக காமெடி நடிகர் கருணாகரனுக்கு விஜய் ரசிகர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் மோதல் நடந்து வருவது தெரிந்ததே

இது காலங்காலமாக நடக்கும் பிரச்சனை: '96' பிரச்சனை குறித்து விஜய்சேதுபதி

சமீபத்தில் வெளியான விஜய்சேதுபதியின் '96' திரைப்படம் ஒருசில பைனான்ஸ் பிரச்சனையால் அதிகாலை காட்சி ரத்தானது.