பிரபல நடிகையின் இன்ஸ்டாகிராம் ஹேக்: அதிர்ச்சியில் ரசிகர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகைகளின் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் அவ்வப்போது ஹேக் செய்யப்பட்டு தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதாக வெளிவரும் தகவல்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது பிரபல நடிகையின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக அவரே தனது டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழில் ’கெளரம்’ மற்றும் ’தமிழ்ச்செல்வியும் தனியார் அஞ்சலும்’ ஆகிய படங்களிலும் இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நடிகை யாமி கவுதம். இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 15 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருந்த நிலையில் அவர் பதிவு செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும்.
இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டு உள்ளதாகவும் அதனை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் யாமி கவுதம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் வெளிவந்தால் அதனை கண்டு கொள்ள வேண்டாம் என்றும் ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். யாமி கவுதம் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்ட தகவல் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Hi,
— Yami Gautam Dhar (@yamigautam) April 3, 2022
This is to inform you all that I've been unable to access my Instagram account since yesterday, it's probably hacked. We're trying to recover it as soon as possible. Meanwhile, if there is any unusual activity through my account, please be aware of it.
Thank you!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com