'அரங்கேற்றம்' டைட்டிலில் தமிழில் ஒரு சிங்கிள் ஷாட் திரைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
’அரங்கேற்றம்’ என்ற டைட்டிலில் தமிழில் சிங்கிள் ஷாட் திரைப்படம் ஒன்று உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கவின் கிருஷ்ணராஜ் இயக்கத்தில் டாமிரிஷியன் சினிமா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் ’அரங்கேற்றம்’. தமிழில் சிங்கில் ஷாட்டில் உருவாகும் இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இந்த படத்தின் டைட்டிலை சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பாட்ஷா’ உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா அறிமுகம் செய்து வைத்தார்.
அந்த 90 களில் நடக்கும் ஒரு திகில் மற்றும் மர்ம கதை அம்சம் கொண்ட இந்தப் படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட உள்ளதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அறிவிப்பு சில நாட்களில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தமிழில் சிங்கிள் ஷாட் திரைப்படம் தயாரிக்கும் ’அரங்கேற்றம்’ படக்குழுவினர்களுக்கு திரையுலகினர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
The title of a crowdfunded Tamil feature film #Arangetram Directed by Kavin Krishnaraj under the banner Damirican Cinema, was revealed by Ace Director Mr.Suresh Krissna today. #Arangetram will be a Single Shot Movie with invisible cuts. pic.twitter.com/8QUX4YDWVJ
— IndiaGlitz - Tamil (@igtamil) April 7, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com