பிரபல தமிழ் பின்னணி பாடகிக்கு பத்ம பூஷன் விருது.. குவியும் வாழ்த்துக்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் பிரபல பின்னணி பாடகிக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.
பத்ம விபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளுக்கான பட்டியலை நேற்று மத்திய அரசு வெளியிட்ட நிலையில் இதில் பத்ம விபூஷன் விருது 6 பேருக்கும், பத்மபூஷன் விருது 9 பேருக்கும் ,பத்மஸ்ரீ விருது 91 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களில் பத்மபூஷன் விருதை பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் பெற இருக்கிறார்.
கடந்த 1945 ஆம் ஆண்டு பிறந்த வாணி ஜெயராமின் குடும்பம், தமிழ் குடும்பம் என்பதும் பக்தியும் ஆச்சாரமும் உள்ள குடும்பம் என்பதும் குறிப்பிடத்தக்கது. கர்நாடக இசையை சிறுவயதிலேயே முறையாக பயின்ற வாணி ஜெயராம், வானொலியில் லதா மங்கேஷ்கார் உள்ளிட்டவர்களின் பாடல்களை கேட்டு தானும் ஒரு பாடகி வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
சென்னை ராணிமேலு ராணி மேரி கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த அவருக்கு பாரத ஸ்டேட் பாங்கில் வேலை கிடைத்தது. வாணியின் கணவர் ஜெயராம் தான் வாணியின் இசை ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் அவருக்கு முறையாக ஹிந்துஸ்தானி இசையை கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின் ஒரு பெண் இருப்பார் என்று கூறப்படும். ஆனால் வாணி ஜெயராமின் வெற்றிக்கு அவரது கணவர் தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1971 ஆம் ஆண்டு இந்தி படத்தில் தனது முதல் பாடலை பாடிய வாணி ஜெயராம், அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்பட பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கே பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ’அபூர்வ ராகங்கள்’ என்ற திரைப்படத்தில் பாடிய ’ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்’ என்ற பாடலுக்காக அவர் தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி தமிழ்நாடு, குஜராத், ஒடிசா ஆகிய மாநிலங்களின் விருதுகளையும் நந்தி விருதையும் பெற்றுள்ளார்.
’வாணி அம்மா’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் வாணி ஜெயராம் அவர்களுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ‘ஆர்.ஆர்.ஆர்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த எம்.எம்.கீரவாணி அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout