ஒரே நாளில் முடிவு செய்து அவசர அவசரமாக நடந்த கல்யாணம்: பிரபல சீரியல் நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
தனது திருமணம் ஒரே நாளில் திட்டமிட்டு அவசர அவசரமாக நடந்ததாகவும், பிளவுஸ் தைக்க கூட நேரமில்லை என்றும் நண்பர்களை கூட அழைக்க முடியவில்லை என்றும் வீடியோ ஒன்றில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜீ டிவியில் ஒளிபரப்பான ’யாரடி நீ மோகினி’ என்ற தொலைக்காட்சி தொடரில் வெண்ணிலா என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகர் நட்சத்திரா. இவர் தற்போது ’வள்ளி திருமணம்’ என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கும், சீரியலில் பணிபுரியும் விஸ்வா என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து விரைவில் இருவரும் திருமணம் செய்யப் போவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் திடீரென நட்சத்திரா தனது காதலர் விஷ்வாவை யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்து விட்டதாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து நட்சத்திரா வீடியோ ஒன்றின் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
தான் தனது தாத்தா வீட்டில் தான் வளர்ந்து வருவதாகவும் தாத்தாவுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாததால் அவர் எனது திருமணத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை பட்டதால் ஒரே நாளில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டதாகவும், எனக்கு பிளவுஸ் தைக்க கூட நேரமில்லை என்றும் நெருங்கிய நண்பர்களை கூட கூப்பிட முடியவில்லை என்றும் கூறினார். விஷ்வா - நட்சத்திரா திருமணம் குலதெய்வம் கோயிலில் குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் நடந்தது என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஒரு சிலர் விஷ்வாவின் கட்டுப்பாட்டில் நட்சத்திரா இருப்பதாகவும், நட்சத்திராவை மிரட்டி விஸ்வா திருமணம் செய்து கொண்டதாகவும் கூறி வரும் நிலையில் நட்சத்திரா அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout