close
Choose your channels

தமிழ் சீரியல் நடிகை கர்ப்பம்.. வைரல் புகைப்படம்.. ரசிகர்கள் வாழ்த்து..!

Sunday, June 2, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சன் டிவி, விஜய் டிவி உள்பட முக்கிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான சீரியலில் நடித்த நடிகை கர்ப்பம் என்று அறிவித்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சன் டிவியில் ஒளிபரப்பான ’கல்யாண பரிசு’ விஜய் டிவியில் ஒளிபரப்பான ’பாவம் கணேசன்’ மற்றும் ’காயத்ரி’ ’குணா’ போன்ற சீரியல்களிலும் நடித்தவர் நடிகை நேஹா கவுடா. இவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வந்தது என்பது இவருக்கு என்ன ஒரு ரசிகர் கூட்டம் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சந்தன் கவுடா என்பவரை நேஹா திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். கர்ப்பமாக இருந்த ஸ்கேன் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த அவர் ’எங்கள் குடும்பம் வளர்ந்து வருகிறது’ என்று பதிவு கூறியுள்ளார்.

மேலும் அவர் ’எங்கள் குடும்பத்தில் ஒரு புதிய நபரை வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம், எங்கள் இருவரது இதயங்கள் மகிழ்ச்சியால் நிரம்பி வழிகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

எங்கள் குடும்பம் தற்போது இரண்டில் இருந்து மூன்றாக வளர்ந்து வருகிறது, புதிய அத்தியாயத்தை தொடங்க நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம், எல்லையற்ற அன்புகள், முடிவு இல்லா புன்னகைகள், எங்கள் வாழ்க்கையில் ஆரம்பம் ஆகிறது என்றும் நேஹா தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment