க்யூட்டாக மாட்டுப்பால் கறக்கும் தமிழ் சீரியல் நடிகை.. வைரல் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் நடிகை தனது மாட்டு பண்ணையில் க்யூட் ஆக பால் கறக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ’கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற சீரியலில் இருந்து நடிகை பிரியா பவானி சங்கர் விலகிய பிறகு அவரது கேரக்டரில் நடிக்க வந்தவர் தான் நடிகை சைத்ரா ரெட்டி. பெங்களூரை சேர்ந்த இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான ’யாரடி நீ மோகினி’ உட்பட பல சீரியல்கள் நடித்துள்ளார்.
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’கயல்’ சீரியலில் நாயகி ஆக நடித்து வருகிறார் என்பதும் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டில் முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அஜித் நடித்த ’துணிவு’ படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் ஒரு மாட்டுப்பண்ணை வைத்திருப்பதாகவும் 50 மாடுகள் தனது பண்ணையில் வைத்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் தற்போது ஆரம்ப நிலையில் தனது மாட்டு பண்ணை இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் பசுமாட்டில் இருந்து அவரே பால் கறக்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் தங்கள் பாணியில் கமெண்ட்ஸ்களை குவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout