நடிப்பு பயிற்சியாளர் ஆகிறார் தமிழ் சீனியர் நடிகர்.. அதிலும் எஸ்.எஸ்.ராஜமெளலி படத்திற்கா?

  • IndiaGlitz, [Monday,July 08 2024]

கோலிவுட் திரை உலகை சேர்ந்த சீனியர் நடிகர் நடிப்பு பயிற்சியாளராகிறார் என்றும் அவர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

’பாகுபலி’ ’பாகுபலி 2’ ’ஆர்.ஆர்.ஆர்’ ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி அடுத்ததாக மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க காடுகளில் நடக்கும் கதை அம்சம் கொண்டது என்றும் அனுமாரை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்திற்காக ஒரு வருடம் ஆரம்ப கட்ட பணிகளை செய்து வரும் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி விரைவில் படப்பிடிப்புக்கு செல்ல இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களுக்கு நடிப்பு பயிற்சி அளிப்பதற்காக நடிகர் நாசரை நியமனம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

முறைப்படி நடிப்பு பயிற்சி பெற்று பல ஆண்டுகள் நடிப்பு துறையில் அனுபவம் உள்ள நடிகர் நாசர் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு ஹைதராபாத்தில் பயிற்சி தர இருப்பதாகவும், நடிப்பு பயிற்சி மட்டுமின்றி வசன பயிற்சி, வசன உச்சரிப்பு ஆகிய பயிற்சிகளையும் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் உருவான ’பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களிலும் நாசர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நீச்சல் குளத்தில் ஹாயாக ஒரு குளியல்.. 45 வயது விஜய், சூர்யா பட நாயகியின் போட்டோஷூட்..!

விஜய், சூர்யா படங்களில் நாயகியாக நடித்த 45 வயது நடிகை நீச்சல் குளத்தில் ஹாயாக குளிக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில்

திரையுலகில் இருந்து விலக போகிறேன்.. திடீர் அறிவிப்பை வெளியிட்ட துஷாரா விஜயன்.. என்ன காரணம்?

இன்னும் சில ஆண்டுகளில் திரை உலகில் இருந்து விலகப் போகிறேன் என நடிகை துஷாரா விஜயன் அறிவிப்பு வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

5 மொழிகளில் வெளியாகிறது 'மகாராஜா'.. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நடிகர் விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

யோகி பாபு ஹீரோவாக நடித்த 'போட்' திரைப்படம்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சிம்புதேவன் 9 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கியுள்ள 'போட்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

என் படத்திற்கு நானே வரி விலக்கு அளிக்கிறேன்.. 'டீன்ஸ்' படத்திற்கு டிக்கெட் விலையை குறைத்த பார்த்திபன்..!

நடிகர் பார்த்திபன் இயக்கிய 'டீன்ஸ்' திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு டிக்கெட் விலையை குறைத்து அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.