தமிழ்ராக்கர்ஸ்-தமிழ்கன் அட்மின் படங்களை வெளியிட்ட தயாரிப்பாளர் சங்கம்

  • IndiaGlitz, [Sunday,September 17 2017]

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக விஷால் பொறுப்பேற்றதில் இருந்தே ஆன்லைன் பைரஸியை ஒழிக்க அவர் எடுத்து வரும் ஆக்கபூர்வமான நடவடிக்கை அனைவரும் அறிந்ததே. அவருடைய ஐடி டீமின் முயற்சியாலும், காவல்துறையின் ஒத்துழைப்பாலும் சமீபத்தில் தமிழ்கன் இணையதளத்தின் அட்மின்களில் ஒருவராகிய கெளரிசங்கர் கைது செய்யப்பட்டது தெரிந்ததே

இந்த நிலையில் தமிழ் ராக்கர்ஸ் அட்மின்களில் ஒருவரான அரவிந்த் லோகேஸ்வரன் மற்றும் தமிழ்கன் அட்மின்களில் ஒருவரான டிக்சன் ஆறுமுகசாமி என்பதையும் தயாரிப்பாளர் சங்கத்தின் ஐடி டீம் கண்டுபிடித்துள்ளது. இவர்களுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ள தயாரிப்பாளர்கள் சங்கம், இவர்கள் குறித்த தகவல் அளித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

மேலும் இவர்கள் இருவருமே சமீபத்தில் சுவிட்சர்லாந்து மற்றும் பிரிட்டனில் நடமாடியதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே திரையுலகினர்களை அச்சுறுத்தி வரும் ஆன்லைன் பைரஸியை ஒழிக்க மேற்கண்ட இந்த இரண்டு நபர்களையும் பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. எனவே இந்த இரண்டு நபர்களை பார்த்தால் உடனே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தகவல் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

More News

திராவிட கட்சிகளை அகற்ற ரஜினி-கமல் இணையவேண்டும்: தமிழருவி மணியன்

சமீபத்தில் தனியார் விழா ஒன்றில் பேசிய கமல்ஹாசன், அரசியலுக்கு வந்தபின்னர் ரஜினிகாந்த் விரும்பினால் தனது அணியில் இணைத்து கொள்ள தயார் என்று பேசினார்.

இன்று தமிழ் இனம் நன்றி சொல்லும் நாள்: கமல்ஹாசன்

தமிழக மக்கள் தமிழ் இனத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, சமூக நீதியை காத்த தந்தை பெரியாரின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்

விஷாலின் துப்பறிவாளன்: முதல் இரண்டு நாள் வசூல் விபரம்

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்த 'துப்பறிவாளன்' திரைப்படம் ரிலீசுக்கு முன்னர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கடந்த வியாழன் அன்று வெளியானது

சாரண, சாரணியர் இயக்க தேர்தல்: எச்.ராஜா தோல்வி

தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று சென்னை மெரினாவில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும், பி.மணியும் போட்டியிட்டனர்.

வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்: மாதவனுக்கு சூர்யா அனுப்பிய குறுஞ்செய்தி

நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் ஜோதிகா, சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று வெளியாகியிருக்கும் படம் 'மகளிர் மட்டும்'.