தமிழ் ராக்கர்ஸ் அட்மினை முட்டிக்கு முட்டி போட வைத்த நடிகரின் மனைவி.. அதிர்ச்சி தகவல்..!

  • IndiaGlitz, [Sunday,July 28 2024]

புதிய திரைப்படங்கள் வெளியான அடுத்த சில மணி நேரங்களில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் அந்த படம் திருட்டுத்தனமாக வெளியாகி வருவதை அடுத்து தயாரிப்பாளர்கள் மிகப்பெரிய நஷ்டம் அடைந்தனர் என்பதும் இந்த கும்பலை பிடிப்பதற்கு பல ஆண்டுகளாக முயற்சி செய்தும் பிடிபடாமல் இருக்கின்றனர் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் நேற்று தனுஷ் நடித்த ’ராயன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் இந்த படத்தை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தியேட்டரில் பார்த்த ஒருவர் திருட்டுத்தனமாக தனது மொபைலில் வீடியோ எடுத்தது தெரிய வந்தது.

இது குறித்த ரகசிய தகவல் காவல்துறைக்கு வந்ததை அடுத்து அந்த தியேட்டரில் அதிரடியாக நுழைந்த காவல்துறை அதிகாரிகள் வீடியோ படம் எடுத்த நபரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட போது தான் அந்த நபர் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திற்கு பதிவு செய்வதற்காக வீடியோ எடுத்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி இதே நபர் டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் திருட்டுத்தனமாக புதிய படங்களின் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

கோடிக்கணக்கில் செலவு செய்து தயாரிப்பாளர் எடுத்த படத்தை வெறும் 5000 ரூபாய் பணத்திற்காக தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் அந்த நபர் பதிவு செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அந்த நபர் குறித்து ரகசியமாக தகவல் அளித்தது பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் மனைவி என்றும் தற்போது தெரியவந்துள்ளது.

More News

'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'.. வேற லெவல் லுக்கில் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யா..!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கராஜன் நடிப்பில் உருவாகி வரும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தில் எஸ்ஜே சூர்யா ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் அவரது கெட்டப் குறித்த

நிறைமாத கர்ப்பிணியாக பிரபல நடிகரின் மகள்.. வைரலாகும் பிரக்னன்ஸி போட்டோஷூட்..!

பிரபல குணச்சித்திர நடிகர் எம்எஸ் பாஸ்கர் மகள் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் கர்ப்ப கால புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள

சீரியலில் களமிறங்குகிறாரா ஆக்சன் கிங் அர்ஜுன்? எந்த டிவியில்?

ஆக்சன் கிங் அர்ஜுன் கடந்த 90கள், 2000ஆம் ஆண்டுகளில் பல அதிரடி ஆக்சன் படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். தற்போது கூட அவர் சில பிரபலங்களின் படங்களில் முக்கிய இடங்களில் நடித்து வருகிறார்

அஜித் - பிரசாந்த் நீல் சந்திப்பு உண்மையா? சுரேஷ் சந்திரா அளித்த முக்கிய தகவல்..!

கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பவரை நடிகர் அஜித் சமீபத்தில் சந்தித்ததாகவும் இருவரும் ஒரு திரைப்படத்தில் இணைய இருப்பதாகவும் இந்த படத்தின் கதை 'கேஜிஎப் 3' படத்துடன்

மாதவன் அடுத்த படத்தை இயக்கும் நடிகையின் கணவர்.. ஒரே படத்தில் 3 பிரபலங்கள்..!

நடிகர் மாதவன் பாலிவுட்டில் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் இந்த படத்தை பிரபல நடிகையின் கணவர் இயக்க இருப்பதாகவும் மாதவனுடன்