தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அவசர செய்தி

  • IndiaGlitz, [Tuesday,March 06 2018]

திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம் தெரிவித்து மார்ச் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் நடந்து வரும் நிலையில் அன்று முதல் புதிய படங்கள் வெளியாகவில்லை. இந்த நிலையில் சற்றுமுன்னர்  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அவசர  செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:

கடந்த ஒரு மாத காலமாக நமது திரைத்துறையின் நலன் கருதி தமிழ், தெலுங்கு, மலையாள, மற்றும் கன்னட தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து digital service provider-க்கு எதிராக மார்ச் 1 முதல் புதிய திரைப்படங்கள் வெளியிடுவதில்லை என்று முடிவு எடுத்து நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று 5.3.2018 ஹைதராபாத்தில் நடைபெற்ற  பேச்சுவார்த்தையில் Joint Action Committee-ன் சார்பில் ஏற்கனவே digital service providers க்கு வைத்த கோரிக்கைகளை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள்.  நாம் எதிர்பார்த்த அளவில் சுமூக உடன்படிக்கை ஏற்படாத காரணத்தினாலும், தமிழ்நாட்டில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் நமது தயாரிப்பாளர்களுக்கு இந்த பிரச்சினையில் எந்த வித ஒத்துழைப்பும் அளிப்பதில்லை என்ற முடிவினை எடுத்ததாலும், நமது நியாயமான  கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் வரை தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிப்பான புதிய படங்கள் வெளியிடுவதில்லை என்ற முடிவு தொடரும்  என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

இந்த அறிக்கையின் மூலம் தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் தொடர்வதால் சினிமா ரசிகர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

More News

அனல் பறந்த ரஜினியின் முதல் அரசியல் பேச்சு:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்து சுமார் 45 நிமிடங்கள் பேசினார்

ஆன்மீக அரசியல் என்ன என்று இனிமேல் பார்ப்பீர்கள்: ரஜினிகாந்த் ஆவேச பேச்சு

உண்மையான, நேர்மையான, ஜாதிமதமற்ற, அறவழியில் நடப்பதுதான் ஆன்மீக அரசியல். ஆன்மீக அரசியல் என்றால் தூய்மையான அரசியல். இறை நம்பிக்கை இருப்பதுதான் ஆன்மீக அரசியல்.

நீட் டாக்டர் அனிதா கேரக்டரில் நடிப்பது யார் தெரியுமா?

கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வு காரணமாக மெடிக்கல் படிக்கும் வாய்ப்பை இழந்த அரியலூர் அனிதா தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தையே உலுக்கிவிட்டது.

என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுட் சகுனிகார்த்திக் ஆய்வாளரை மிரட்டும் ஆடியோ

சமீபத்தில் மதுரையில் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்ட ரவுடிகளில் ஒருவராகிய சகுனிகார்த்திக், சில நாட்களுக்கு முன் ஆய்வாளர் ஒருவரை செல்போனில் மிரட்டிய உரையாடல் குறித்த ஆடியோ ஒன்று வெளியாகி யுள்ளது.

ஸ்ரீதேவி குறித்து அமலாவின் அர்த்தமுள்ள பதிவு

ஸ்ரீதேவியின் மரணத்திற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், அவரது அழகே அவரது உயிருக்கு ஆபத்தாக மாறிவிட்டதும் ஒரு காரணம்.