தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அவசர செய்தி
Send us your feedback to audioarticles@vaarta.com
திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம் தெரிவித்து மார்ச் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் நடந்து வரும் நிலையில் அன்று முதல் புதிய படங்கள் வெளியாகவில்லை. இந்த நிலையில் சற்றுமுன்னர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அவசர செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:
கடந்த ஒரு மாத காலமாக நமது திரைத்துறையின் நலன் கருதி தமிழ், தெலுங்கு, மலையாள, மற்றும் கன்னட தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து digital service provider-க்கு எதிராக மார்ச் 1 முதல் புதிய திரைப்படங்கள் வெளியிடுவதில்லை என்று முடிவு எடுத்து நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று 5.3.2018 ஹைதராபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் Joint Action Committee-ன் சார்பில் ஏற்கனவே digital service providers க்கு வைத்த கோரிக்கைகளை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள். நாம் எதிர்பார்த்த அளவில் சுமூக உடன்படிக்கை ஏற்படாத காரணத்தினாலும், தமிழ்நாட்டில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் நமது தயாரிப்பாளர்களுக்கு இந்த பிரச்சினையில் எந்த வித ஒத்துழைப்பும் அளிப்பதில்லை என்ற முடிவினை எடுத்ததாலும், நமது நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் வரை தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிப்பான புதிய படங்கள் வெளியிடுவதில்லை என்ற முடிவு தொடரும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
இந்த அறிக்கையின் மூலம் தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் தொடர்வதால் சினிமா ரசிகர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments